கள்ளக்காதலியுடன் வசமாக சிக்கிய கணவன் – நடுரோட்டில் ஆடி காரை அடித்து உடைத்த மனைவி..!


சீனாவில் தன்னை ஏமாற்றிய கணவரையும் அவரது கள்ளக்காதலியையும் காரில் ,வைத்து கையும் களவுமாக பிடித்த மனைவி அவர்களுடன் சண்டை யிட்டு ஆடி சலூன் காரை உடைத்து உள்ளார். இது குறித்த வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது

வீடியோ காட்சியில் கிழக்கு சீனவில் நஞ்சிங் நகரில் தனக்கு துரோகம் செய்து விட்டு ஆடி சலூன் காரில் மற்றொரு பெண்ணை ஏற்றி செல்வதா என கூறி ஒரு பெண் கணவர் ஓட்டிச் சென்ற கார் மீது குதித்து ஏறுகிறார். பின்னர் அந்த கார் கண்ணாடியை உடைக்கிறார். கணவனையும் அவரது கள்ள காதலியையும் திட்டியவாறே கண்ணாடியை உடைக்கிறார்.

காரை டிரைவர் நிறுத்தாமல் ஓட்டி செல்கிறார். காரை விட்டு இறங்கி இருவரையும் திட்டியவாரே கள்ளக்காதலியின் முடியை பிடித்து இழுத்து சண்டை போடுகிறார். கணவன் அவரை சமாதானபடுத்த முயலுகிறார்.

பின்னார் கூடி இருந்தவர்கள் இருவரையும் அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!