பார்லர் போகாமலேயே வீட்டிலே அழகைப் பாதுகாக்கும் இரகசிய குறிப்புக்கள்..!


சருமம், மற்றும் கூந்தல் ஆரோக்கியம் நமது அழகிற்கு முக்கியமானது. சருமம் மற்றும் கூந்தல் பிரச்சினைகளிற்கு சிறப்பு மருவத்துகளர்களை நாடுவதை விட ,நம் வீட்டிலேயே இயற்கையான தீர்வுகள் உள்ளன.

இந்த முறைகளை பின்பற்றுவதால் பக்கவிளைவின்றி ஆரோக்கியமான மிருதுவான சருமத்தையும் கூந்தலையும் பெறமுடியும்.

இயற்கையான தீர்வுகள்

(1) பச்சைதேநீர் அருந்துதல்.
பச்சைத் தேயிலையில் ஆன்டிஒக்ஸிடன் தன்மை உள்ளது, இது கலங்கள் உடைவதை தடுக்கின்றது. அத்துடன் புற்றுநோய் வருவதை தடுக்கின்றது. மேலும் சருமம் முதிர்வடைவதை தடுத்து, புதுப் பொலிவுடன் இருக்க உதவுகின்றது.

(2) இஞ்சி.
இஞ்சி மிகவும் காரமானது. இது இர்த்தோட்டம், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த உதவுகின்றது. மேலும் சருமம் வயதடைவதைத் தடுக்கின்றது .இதனை தேநீர், உணவுகளுடன் சுவையூட்டியாக சேர்த்துக் கொள்ள முடியும்.

(3) இயற்கையான ஆபத்தில் இருந்து பாதுகாத்தல்.

சூரியஒளி, UVகதிர், மாசடைந்த காற்று, அதிக வெப்பம் போன்றவற்றால் சருமம் பொலிவிழந்து விடுகின்றது. இதிலிருந்து நமது சருமத்தை தகுந்த முறையில் பாதுகாக்க வேண்டும்.

(4) உடற்பயிற்சியை அதிகரித்த்ல்
தினமும் நடத்தல், சைக்கிள் ஒடுதல், மின்தூக்கியை தவிர்த்து படிக்கட்டுகளில் செல்லுதல் போன்றவற்றால் ஆரோக்கியத்தை பேணமுடியும்.


(5) சர்க்கரை மற்றும் பதப்படுத்திய உணவை தவிர்த்தல்.
சர்க்கரை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்ளுதல், பதப்படுத்திய உணவுகளாகிய பிஸ்கட், ஜஸ்கிரீம், துரித உணவுகள் உடல் ஆரோக்கியத்திற்கு ஆபத்தையே ஏற்படுத்துகின்றன. இவற்றை தவிர்ப்பது சிறந்தது

(6) உடல் நிலையை புரிந்து கொள்ளுதல்.
உடலுக்குத் தேவையான உணவை இயற்கையான முறையில் எடுத்துக் கொள்ளுதல், தேவையான நேரத்தில் ஓய்வையும் தூக்கத்தையும் தருவதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை பேணமுடியும்.


சிறந்த சருமத் தீர்வுகள்.
(1) முட்டைக்கோஸ் இலை
பாலூட்டும் தாய்மார்கள் முட்டைக்கோஸ் இலையை மார்பகப் பகுதியில் வைப்பதன் மூலம் வீக்கம், எரிச்சல் போன்றவற்றை தவிர்க்க முடியும்.

(2) புளிப்பானகிரீம்
புளிப்பான கிரீம் முகம், கை பகுதிகளில் தடவி சில நிமிடங்களின் பின்னர் நன்றாக கழுவ வேண்டும். இதனால் மிருதுவான சருமத்தை பேணமுடியும்.

(3) முட்டை
இரண்டு முட்டைகள் எடுத்து கூந்தல் மற்றும் மண்டையோட்டில் நன்றாக தடவி, 10 நிமிடங்களின் பின்னர் சம்போ பயன்படுத்தி குளிப்பதன் மூலம் அடர்த்தியான ஆரோக்கியமான கூந்தலைப் பெறமுடியும்.

(4) தோய்த்து உலர்ந்த ஆடைகள்
தினமும் ஒவ்வொரு குளியலின் பின்னர், தோய்த்து உலர்ந்த் ஆடைகளை அணிவது உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது.

(5) எண்ணெய்மசாஜ்.
தேங்காய்எண்ணெய், பாதாம் எண்ணெய் போன்றவற்றைப் பயன்படுத்தி மசாஜ் செய்வதன் மூலம் உடல் ஆரோக்கியத்தையும், அழகையும் பேணமுடியும். – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!