இது உங்களுக்கு இல்லை.. குழந்தைப் பருவத்தை நேசிக்காதவர்களுக்கு..!


குழந்தைப் பருவம் என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் முக்கியமான காலப்பகுதி. இக் குழந்தைப்பருவத்தில் போதியளவு அன்பைப் பெறாதவர்களிடம் அதை நேசிக்க தெரியாதவர்களிடம் வித்தியாசமான குணாதிசயங்களை பார்க்க முடிகின்றது.

நம்மில் பலருக்கு ஆசிர்வதிக்கப்பட்ட சிறப்பான சூழல் கிடைக்கிறது. ஆனால் சிலருக்கு அது கிடைப்பதில்லை. குழந்தைப் பருவத்தில் அன்பைப் பெறாதவர்களிடம் இக்குணாதிசயங்களை அதிகமாக பார்க்க முடிகிறது.

(1) விலகி இருத்தல்
குழந்தைப் பருவத்தில் அன்பை இழந்தவர்கள் மற்றவர்களிடம் சேர்ந்து இருப்பதை பாதுகாப்பாக கருத மாட்டார்கள். அத்துடன் அவர்களது திறமை மற்றும் உறவு முறையில் பாதிப்பு ஏற்படுகிறது.

(2) சுய நம்பிக்கையின்மை.
பெரியவர்களானதும் இவர்களிடத்தில் சுயநம்பிக்கை குறைய ஆரம்பிப்பதனால் அவர்களின் முக்கியத்துவத்தை அவர்களே அறிவதில்லை.

(3) கண்மூடித்தனமான நம்பிக்கை
இவர்கள் பெரியவர்களானதும் யாராவது ஒருவர் மீது கண்மூடித்தனமான நம்பிக்கையை வைத்து விடுவார்கள். இந்த ஆரோக்கியமற்ற நம்பிக்கையால் அவர்களது வாழ்க்கை சிரமப்பட்ட ஒரு வாழ்க்கையாகவே திகழும்.


(4) வாழ்கையை சரியாக வாழ முடியாமை.
வாழ்க்கையின் எல்லைகளை புரிந்து கொள்வது, மற்றவர்களுடன் சேர்ந்து வாழ்வது போன்றவை கடினமானதாக இருக்கும். இவர்கள் நினைக்கும் செயல்கள் தவறாக இருந்தாலும் அதை செய்ய முனைவார்கள். சில செயல்களை சரியாக செயற்படுத்த முடியாத நிலையும் ஏற்படும்.

(5) சந்தேகம்
அன்பை இழந்து வளரும் குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படுவதால் மற்றவர்களை புரிந்து கொண்டு நம்பிக்கை வைப்பதிலும் பின்னடைவு காட்டுவார்கள். எல்லா காரியத்திலும் சம்பந்தம் இல்லாமல் இவர்களுக்கு சந்தேகம் ஏற்படுவதற்கும் வாய்ப்பு இருக்கின்றது.

(6) முழுமையான அபிவிருத்தியின்மை
குழந்தைப் பருவத்தில் அன்பை இழந்தவர்கள் உடல், மனது, உணர்வுகள், ஆகியவற்றில் போதிய வளர்ச்சியடையாமல் இருப்பார்கள். மனதளவில் இவர்களின் செயற்பாடுகள் அபிவிருத்தி அடையாமல் குறைவான நிலையிலேயே காணப்படும். ஆரோக்கியமான குழந்தைப் பருவம் மனிதனின் வழ்க்கைக்கு இன்றியமையாதது. – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!