வீட்டுக்கு வந்த மருமகளின் கள்ளக் காதலனை அடித்து உதைத்த மாமியார்..!


துருக்கியின் கொச்சாலி மாகாணத்தில் அங்குள்ள ஓரு வீட்டில் மருமகளும், மாமியாரும் இருந்த போது மருமகளின் கள்ளக்காதலன் வீட்டுக்கு வந்துள்ளார். இதை பார்த்து கோபமடைந்த மாமியார் மருமகளை ஒரு அறையில் வைத்து பூட்டி வைத்துவிட்டு, அந்த நபரை நிர்வாணமாக்கி அடித்தார்.

பின்னர் நபர் வீட்டிலிருந்து தப்பித்து சாலைக்கு வந்த நிலையில் அவரை விடாமல் துரத்திய மாமியார் சாலையிலேயே வைத்து அடித்து உதைத்தார்.

இதை பார்த்து அங்கு மக்கள் கூடிய நிலையில் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அடிவாங்கிய நபரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் இது குறித்து விசாரித்து வருகிறார்கள்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!