புற்றுநோய் சிகிச்சைக்கு முன் கதறியழுத நடிகை சோனாலி! உருக்கமான பதிவு..!


தமிழில் ’பம்பாய்’ படத்தில் ’ஹம்மா ஹம்மா’ பாடலுக்கு ஆடியவர் இந்தி நடிகை சோனாலி பிந்த்ரே. பின்னர், ’காதலர் தினம், ’கண்ணோடு காண்பதெல்லாம்’ படங்களின் ஹீரோயினாக நடித்தார்.

2002 ஆம் ஆண்டு தயாரிப்பாளரும் இயக்குநருமான கோல்டி பெல்லை திருமணம் செய்துகொண்ட இவர், பிறகு நடிப்பதில் இருந்து ஒதுங்கியே இருந்தார். அவ்வப்போது இந்தி தொலைக்காட்சிகளின் நடன நிகழ்ச்சிகளுக்கு நடுவராக இருந்தார்.

43 வயதாகும் சோனாலி தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதற்காக அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் அவர் சமூகவலைத்தளத்தில் தெரிவித்திருந்தார். இதையடுத்து அவர் விரைவில் குணமாக ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்தனர். அவருக்கு ஆதரவாக பல்வேறு நடிகர், நடிகைகளும் கருத்துத் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் புற்றுநோய்க்கான கீமோ சிகிச்சைக்கு முன், முடிகளை வெட்டும் வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில் கண்கலங் கும் சோனாலி, இன்ஸ்டாகிராமில் புதிய புகைப்படத்துடன் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அதில், ’நமக்குள் மறைந்திருக்கும் வலிமையை வெளிகொண்டு வரும்வரை நமது வலிமை நமக்கே தெரியாது’ என்பது எனக்குப் பிடித்த எழுத் தாளர் இசபெல் அலெண்டேவின் வார்த்தை. அதைதான் நினைத்துக்கொள்கிறேன்.

இது சோகம், போர், தேவைக்கான நேரம். மக்கள் அளிக்கும் ஆதரவுக்கு நன்றி. கடந்த சில நாட்களாக வரும் ஆதரவுகள் பிரமிக்க வைக்கிறது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து வெற்றிகரமாக மீண்டவர்கள் பற்றி ரசிகர்கள் அனுப்பிய விவரங்கள் அதிக பலத்தையும் தைரியத்தையும் அளிக்கிறது. ரசிகர்களின் அன்பு வலிமையைத் தருகிறது’ என்று தெரிவித்துள்ளார்.-Source: PUTHIYATHALAIMURAI

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!