பெண்கள் இனி சாலையில் மொபைலில் பேசினால் அபராதம்..? எங்கு தெரியுமா..?


இனிமேல் சாலையில் நடக்கும் பெண்கள் மொபைலில் பேசினால் அபராதம் என உத்தர பிரதேச கிராமம் ஒன்றில் சட்டம் அமலுக்கு வர உள்ளது.

உத்ரபிரதேச மாநிலத்தில் யோகி அதித்யநாத் முதல்வராக தெரிவு செய்யப்பட்ட நாள் முதலே பல அதிரடி மாற்றங்களும் வினோத நிகழ்வுகளும் அந்த மாநிலத்தில் அரங்கேறி வருகின்றன.

இனிமேல் சாலையில் நடக்கும் பெண்கள் மொபைலில் பேசினால் அபராதம் என உத்தர பிரதேச கிராமம் ஒன்றில் சட்டம் அமலுக்கு வர உள்ளது.

மதுரா மடோரா என்ற கிராமத்தில் வந்திருக்கும் இந்த புதிய சட்டம் அங்கு பெரிய அளவில் பிரச்சனைகளை உருவாக்கி இருக்கிறது.

இவையெல்லாமே முதல்வரை மயக்குவதற்கான திட்டம் என்று அந்த கிராம மக்களால் கூறப்படுகிறது.

மதுகுடித்தல் நிகழ்வில் தொடங்கி மாட்டுக்கறி உண்ணுதல், மொபைல் பயன்படுத்துதல் வரை நிறைய வினோதமான சட்டங்கள் உருவாக்கப்பட்டு உள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தில் இருக்கும் மதுரா மடோரா என்ற கிராமத்தில் தான் இந்த பல அதிரடிமாற்றங்கள் கொண்டுவரப்படுகிறது.


இது முதலில் பஞ்சாயத்து அளவில் செயல்படுத்தப்பட இருக்கிறது. அதன் பின்னர் இதனை மாநிலம் முழுக்க அமல்படுத்த வேண்டும் என்று கூறுகின்றனர்.

ராம் ராஜ்ஜியம் அமைப்பதற்காக தான் இந்த சட்டங்கள் கொண்டு வரப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

அதுமட்டும் அல்லாது அந்த கிராமத்தில் மாட்டுக்கறி உண்பவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் அபராதம் என கூறப்பட்டுகிறது.

மாட்டுக்கறி உண்பது மட்டும் இல்லாமல் மாடுகளை கடத்துவது, மாடுகளை அனுமதி இல்லாமல் விற்பது, மாடுகளை அவமதிப்பது என எந்த விதமான செயலில் ஈடுபட்டாலும் அதற்கு 2 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும்.

மேலும் கிராமத்தில் மது குடித்தால் 1.11 லட்சம் அபராதம் என்று கூறப்பட்டுள்ளது. வெளியில் மட்டும் இல்லாமல் வீட்டுக்கு உள்ளேயும் மது குடிக்க அனுமதி கிடையாது. மேலும் மது குடித்தவர்கள் அந்த ஊருக்குள் நுழையவும் அனுமதி இல்லை.


இந்த இரண்டு சட்டமும் ஏற்கனவே அந்த கிராமத்தில் அமலில் இருக்கும் நிலையில், புதிதாக இன்னொரு முக்கியமான சட்டமும் கொண்டுவரப்பட்டு உள்ளது.

அதன் பிரகாரம் சாலையில் பெண்கள் இனி மொபைல் போன் பயன்படுத்த கூடாது என்று கூறியுள்ளது.

கிராம சட்டத்தையும் மீறி சாலையிலும், பஸ் ஸ்டாண்டிலும் மொபைல் பயன்படுத்துபவர்களுக்கு 21,000 அபராதம் என்று கூறியிருக்கிறது.

இது பெண்களுக்கு மத்தியில் நிலவும் ஒழுக்க சீர்கேடுகளை மட்டுப்படுத்தி பாதுகாப்பை கொடுக்கும் என அந்த கிராம நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!