தாய்லாந்து குகைக்குள் சிக்கிய சிறுவன் ‘எழுதிய கடிதம்’ – நெஞ்சை உலுக்கும் வலியில் பெற்றோர்கள்..!


தாய்லாந்து குகையில் சிறுவர்களுடன் மாட்டிக்கொண்ட கால்பந்தாட்டபயிற்சியாளர் எழுதிய கடிதத்தை தாய்லாந்து கடற்படையினர் வெளியிட்டு உள்ளனர்.

இந்த கடிதத்தை பார்த்து அனைவரும் மனமுருகி அவர்களுக்காகவேண்டி வருகின்றனர்

தாம் லுவாங் குகைக்குள் சிக்கிய 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளர் பாதுகாப்பாக உள்ளார்கள் என்பதை 9 நாட்கள் தேடுதல் வேட்டைக்கு பின்னர் தெரிய வந்துள்ள்ளது.

அந்த சிறுவர்களை மீட்க வேண்டும்என்பதற்காக உலகம் முழுவதும் இருந்து பிரார்தனை செய்து வருகின்றனர். மேலும் சிறுவர்களை மீட்கும் பணியில்,தாய்லாந்து பிரிட்டன் அமெரிக்காஉள்ளிட்டபன்னாடு மீட்புப்குழுவை சேர்ந்தவர்கள்மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பயிற்சியாளர் வெளியிட்டநெஞ்சை உலுக்கும்கடிதத்தை வெளியிட்து உள்ளது தாய் நேவி சியல்.

அந்தகடிதத்தில் பயிற்சியாளர் எக்காபால் சந்த்தாவாங்,”சிறுவர்கள் பத்திரமாக உள்ளார்கள்..பெற்றோர்கள்கவலைப்பட வேண்டாம்..நான் உங்கள் குழந்தைகளை பத்திரமாகபார்த்துக்கொள்வேன்.. எங்களுக்கு தொடர்ந்து மனம்தைரியம் கொடுத்ததற்கு மிக்கநன்றி என்றும், இது போன்று நடந்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என எழுதியுள்ளார்….

அதில் ஒரு சிறுவன், “இங்கு மிகவும் குளிராகஉள்ளது என்று தன் பெற்றோருக்கு எழுதியுள்ளான்.. இந்தகடிதத்தைபடிக்கும் ஒவ்வொரு பெற்றோரும்தன் மகன்போன்று உணர்ந்துநெஞ்சைஅடைத்துக்கொள்ளும்துக்கமாககண் கலங்க செய்கின்றனர்

இந்நிலையில் 13 போரையும் மீட்க சென்ற வீர்களில் ஒருவர் குகையில் சிக்கிமரணம் அடைந்துள்ளார்.

மற்றொரு பக்கம்மேலிருந்து துளையிட்டு அவ்வழியாக மீட்கமுயற்சி மேற்கொள்ளப்பட்டும்,குகையில் உள்ள தண்ணீரை வெளியேற்றப்பட்டும் வருகிறது…

மேலும் குகையில் சிக்கியிருப்பவர்களுக்குமூச்சுத்திணறல்ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால்,அவர்களுக்கு தேவையான ஆக்சிஜன் மற்றும்உணவு உள்ளேகொண்டு செல்லமுயற்சி மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

இந்நிலையில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்பதால், மேலும் குகைக்குள் தண்ணீர்அதிகரிக்ககூடும்என்ற நிலையும் உள்ளது.எனவேஎப்போதுமீட்கப்படும் எனசரியாககூற முடியாதநிலை உள்ளது என பிபிசி செய்தி நிறுவனசெய்தியாளர்தெரிவித்து உள்ளார்.-Source: tamil.asianetnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!