அன்னை தெரசா நிறுவனத்தில் கன்னியாஸ்திரிகள் செய்த கேவலமான வேலை..?


அன்னை தெரேசா தொடங்கிய ‘மிஷனரீஸ் ஆப் சேரிட்டி’ என்கிற அறக்கட்டளை நாடுமுழுவதும் செயல்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளை வறுமையால் வாடுபவர்களுக்கும், ஆதரவற்ற குழந்தைகள், பெண்கள், முதியோர் ஆகியோருக்கும் பல்வேறு வகைகளில் உதவி செய்து வருகிறது.

ஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகர் ராஞ்சியில் ‘மிஷனரீஸ் ஆப் சேரிட்டி’ அறக்கட்டளையின் கீழ் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது.

இந்த காப்பகம் குழந்தைகளுக்கு மட்டும் இன்றி, திருமணம் ஆகாமல் சிறுவயதிலேயே தாயான சிறுமிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் ஆதரவு அளிக்கிறது.

இந்த குழந்தைகள் காப்பகத்தில் இருந்து பச்சிளம் குழந்தைகளை தத்தெடுப்பதற்கு ரூ.1 லட்சம் வரை பெறப்படுவதாக போலீசாருக்கு புகார் வந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். இதில் ‘மிஷனரீஸ் ஆப் சேரிட்டி’ அறக்கட்டளையின் தலைவியான கன்னியாஸ்திரி கொன்சிலியா மற்றும் அவருடைய உதவியாளரான மற்றொரு கன்னியாஸ்திரி ஆகிய இருவரும் சேர்ந்து, குழந்தைகள் காப்பகத்தில் பிறந்த 3 பச்சிளம் குழந்தைகளை தலா ரூ.50 ஆயிரம் வீதம் 3 தம்பதிகளுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, கொன்சிலியா மற்றும் அவருடைய உதவியாளர் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். காப்பகத்தில் இருந்து குழந்தைகளை வாங்கி சென்ற தம்பதிகளின் விவரங்கள் குறித்து அவர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!