விஜயகலா மகேஸ்வரனை உடனடியாக கைது செய்ய ஜனாதிபதிக்கு கோரிக்கை..!


நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனை உடனடியாக கைது செய்யுமாறு கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் மனு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.

சிங்கள ராவய அமைப்பு குறித்த மனுவை இன்று கையளித்துள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அந்த அமைப்பின் செயலாளர் மகல்கந்தே சுகந்த தேரர்,

“விடுதலைப் புலிகளின் மீள்வருகை குறித்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை முன்வைத்துள்ளார்.

இந்நிலையில், அமைச்சு பதவியிலிருந்து விலகியுள்ள அவரை உடனடியாக கைது செய்யவேண்டும். தனக்கு இருக்கும் நிறைவேற்று அதிகாரத்தை கொண்டு, விஜயகலா மகேஸ்வரனை உடனடியாக கைது செய்யுமாறு ஜனாதிபதி பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிடவேண்டும்.

நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுத்துள்ள அவரை காலம் தாழ்த்தாது உடனடியாக கைது செய்ய நாட்டின் தலைவர் என்ற வகையில் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கோரி ஜனாதிபதிக்கு மனு ஒன்றை கையளித்துள்ளதாக” அவர் மேலும் தெரிவித்துள்ளார்.-Source: tamilwin

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!