தலைக்கு அதிகமாக ஷாம்பு பயன்படுத்தினால் என்ன பிரச்னை ஏற்படும் தெரியுமா?


உடம்பை எந்த அளவிற்கு சுத்தமாக வைத்துக்கொள்கிறோமோ, அந்த அளவிற்கு தலையையும் சுத்தமாக வைத்துக்கொள்ளுதல் மிகவும் அவசியமாகும். இதனால் முடி உதிர்தல், நரைமுடி, பொடுகு போன்றவை ஏற்படாமல் தவிர்க்கலாம்.

தலைமுடியை பேணிக்காக்கவும், சுத்தமாக வைத்துக் கொள்ளவும் அடிக்கடி ஷாம்பு போட்டு குளிக்கலாமா என்ற கேள்வி பெண்களுக்கு இருப்பதுண்டு. அவ்வாறு சாம்பு போடுவதால் மட்டும் தலை சுத்தமாகிவிடாது. மேலும் அது பல்வேறு விளைவுகளையும் ஏற்படுத்தும்.

அந்த வகையில், கடைகளில் வாங்கி உபயோகிக்கும் ஷாம்புவை விட, வீட்டிலேயே தயாரிக்கும் ஷாம்புகள் மிகவும் நல்லது.

நாம் தினசரி ஷாம்பு போட்டு குளிப்பதால் ஷாம்புவில் உள்ள கெமிக்கல்ஸ் நம் ஸ்கால்பில் உள்ள இயற்கையான எண்ணெய் பசையை நீக்கி முடி உதிர்வு, பொடுகுத் தொல்லை போன்ற பிரச்சனைகள் ஏற்படுத்தும்.


உடலின் ஏற்படும் சூட்டை தவிர்பதற்காக வாரத்திற்கு 2 முதல் 3 முறை தலைக்கு குளிப்பதற்கு ஒரு மணி நேரம் முன்னதாக, நன்கு தலையில் எண்ணெய் தேய்து குளித்தால் மிகவும் நல்லது.

ஷாம்புவை போட்டுக் குளிக்கும் போது முடியின் முனைப்பகுதிகளுக்கு போடக் கூடாது. அவ்வாறு செய்தால் முனைப்பகுதி வெடிக்கத் தொடங்கிவிடும்.

தலைமுடியிலுள்ள ஸ்கால்ப்கள் வறட்சி அடையாமல் இருக்க இரண்டு முறை ஷாம்பு போடுவதையும் தவிர்ப்பது நல்லது.

ஷாம்பு பயன்படுத்தும்போது கண்டிஷ்னர் பயன்படுத்தினால் நல்லது. கண்டிஷ்னரை முடியின் முனைப் பகுதிகளில் தடவி அலச வேண்டும்.

எப்படி துணியைத் துவைக்கும் முன் துணிகளை நீரில் ஒரு முறை அலசி ஊற வைக்க வேண்டுமோ, அதேபோல் தலைக்கு ஷாம்பு போடும் முன் முடியை நீரில் நன்கு அலச வேண்டும்.

அதிலும் வெதுவெதுப்பான நீரில் முடியை அலசினால், ஸ்கால்ப்பில் உள்ள மயிர்துளைகள் திறக்கப்பட்டு அதில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேற உதவியாக இருக்கும்.

இதன் மூலம் தலையை குளிர்ச்சி அடைவதுடன், அழுக்குகளும் நீங்கி தலை முடி பளபளப்பாக தோன்றும்.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!