வேடிக்கையாக எடுக்கபட்ட புகைப்படத்தால் அமெரிக்க செனட்டருக்கு ஏற்பட்ட பரிதாபம்…!


அமெரிக்காவின் நகைச்சுவை நடிகர் அல் பிராங்கன். தற்போது இவர் செனட்டராக உள்ளார். இவர் தனது மார்பகங்களை தொட்டதாகவும் மேலும் வலுகட்டாயமாக தனக்கு முத்தம் கொடுத்ததாகவும் பெண் ரேடியோ ஜாக்கி லீவன் ட்வீடென் ஒருவர் புகார் கூறி உள்ளார்.

ஜனநாய்க க்ட்சியின் செனட்டரான பிராங்கன் இது குறித்து நேற்று மன்னிப்புக் கேட்டார். செனட்டின் ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சியின் தலைவர்கள் குற்றச்சாட்டுகளை ஆய்வு செய்வதற்கான ஒழுக்கவியல் குழுவிற்கு அழைப்புவிடுத்தனர், மேலும் பிராங்கன் ஒத்துழைப்பார் என்றும் கூறினார்கள்.

இது குறித்து பெண் ரேடியோ ஜாக்கி கண்கள் மூடிய இராணுவ விமானத்தில் உட்கார்ந்திருந்தபோது, செனட்டர் மார்பகத்தின் மேலே அவரது கைகளை கொண்டு வருவது போன்று ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டு உள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த பிராங்கன் அது வேடிக்கையாக எடுக்கபட்ட புகைப்படம் என கூறி உள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!