லதா ரஜினிகாந்த்துக்கு இப்படி ஒரு நிலமையா..? எச்சரித்த சுப்ரீம் கோர்ட்…!


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் சௌந்தார்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான அனிமேஷன் படம் கோச்சடையான். இந்த படத்தை மீடியா ஒன் குளோபல் நிறுவனம் தயாரித்திருந்தது.

இந்த திரைப்படத்தின் தயாரிப்பு செலவுகளுக்காக குளோபல் நிறுவனம், ஆட்பீரோ என்ற நிறுவனத்திடம் கடன் பெற்றது. இந்த கடனுக்கு, லதா ரஜினிகாந்த் உத்திரவாதம் அளித்திருந்தார்.

மேலும் ‘கோச்சடையான்’ படத்தின் உரிமையை ஆட்பீரோ நிறுவனத்திற்கு வழங்க மீடியா குளோபல் நிறுவனம் ஒப்புதல் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால் சொன்ன படி உரிமையையை தராமலும், கடனை திருப்பி செலுத்தாதலும், இருந்ததால் ஆட்பீரோ நிறுவனம் தங்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை தராமல் இழுக்கடித்து வருவதாக கூறி குளோபல் நிறுவனத்தின் மீதும், லதா ரஜினிகாந்த் மீதும் வழக்கு தொடர்ந்தது.

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற விசாரணையில், ஜூலை மாதம் 3 ஆம் தேதிக்குள் ஆட்பீரோ நிறுவனத்திற்கு குளோபல் நிறுவனம் அல்லது லதா ரஜினிகாந்த் கடன் தொகையை திருப்பி செலுத்த வேண்டும் என கூறி உத்தரவிடப்பட்டது.

ஆனால் இன்னும் கடன் தொகை திருப்பி செலுத்தப்படாத காரணத்தால், மீண்டும் சுப்ரீம் கோர்ட் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது . கடன் தொகை எப்போது செலுத்தப்படும் என லதா ரஜினிகாந்த்துக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியதோடு, வரும் 10 ஆம் தேதிக்குள் பணத்தை செலுத்தாவிட்டால் நடவடிக்கை பாயும் என கடுமையாக எச்சரித்துள்ளது.-Source: tamil.asianetnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!