ஆண் குழந்தையை பெற்றெடுத்த தொகுப்பாளினி அஞ்சனா…! குவியும் வாழ்த்து…!


சின்னத்திரையில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் மிகவும் பிரபலமானவர் விஜே அஞ்சனா.

இவர் கடந்த 2016 ஆண்டு, கயல் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமான கதாநாயகன் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்தை தொடர்ந்தும், சின்னத்திரை நிகழ்சிகள் மற்றும் வெள்ளித்திரை பட விழாக்களை தொகுத்து வழங்கி வந்த இவர், கடந்த ஆண்டு திடீர் என தனக்கு சிறு இடைவெளி தேவைப்படுவதாகவும், இனி முழு நேரம் தன்னுடைய குடும்பத்தை கவனித்துக்கொள்ள போவதாக தெரிவித்து விட்டு சின்னத்திரையில் இருந்து விலகினார்.

பிறகு தான் தெரிந்தது இவர் கர்ப்பமாக இருப்பதால் தான் சின்னத்திரையில் இருந்து விலகினார் என்று…

இந்நிலையில் இவருக்கு இன்று அழகான ஆண் குழந்தை பிறந்திருப்பதாக, இவருடைய கணவர் கயல் சந்திரன் தன்னுடைய ட்விட்டர் பகுதியின் மூலம் தெரிவித்துள்ளார்.

இதனால் பல ரசிகர்கள் மட்டும் இன்றி பிரபலங்களும், தொடர்ந்து அஞ்சனா மற்றும் கயல் சந்திரன் இருவருக்கும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.-Source:tamil.asianetnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!