மர்ம உறுப்பு இன்றி பிறந்தவர்… 44 ஆண்டுகளுக்கு பின் காதலியுடன் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம்…!


உறுப்பு இன்றி பிறந்தவர் ஒருவர் 7 கோடி செலவு செய்து பயோனிக் உறுப்பு பொருத்தினார். அவர் அறிவியலுக்கு நன்றி தெரிவித்து உள்ளார்.

ஆண்ட்ரூ வார்டில் ஒரு அதிசய பிறவியாக பிறந்தார். அவருக்கு சிறுநீர்ப்பை கருப்பைக்கு வெளியே உருவாகியது. குறிப்பாக அவர் மர்ம உறுப்பு இல்லாமல் பிறந்தார். வார்டிலின் நிலைமை சிறுநீர்ப்பை நீக்கம் என அழைக்கப்படுகிறது.

எனினும் அவர் தற்போது தனது 44 வயதில் வாழ்க்கையில் முதல் முறையாக செக்ஸ் அனுபவித்து உள்ளார். இதற்காக அவர் அறிவியலுக்கு நன்றி தெரிவித்து உள்ளார். இது மேயோ கிளினிக் அறிக்கைபடி 2 கோடி மக்களில் ஒருவருக்கு இத்தகைய குறைபாடு ஏற்படக்கூடும்.

வார்டில் உறுப்பு இல்லாமல் பிறந்தார், மேலும் ஒரு அண்டம் இல்லாமலும் இருந்தார். அவரது சிறுநீர்ப்பை மற்றும் உள் உறுப்பு சரிசெய்யப்பட்டு அறுவை சிகிச்சைகள் மூலம் இத்தனை ஆண்டுகள் வாழ்ந்து வருகிறார்.

வார்டில் அவரது நிலை காரணமாக, மனச்சோர்வு ஏற்பட்டு தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவு எடுத்தார்.

அவர் லண்டனில் UCLH ல் சிறுநீரக நிபுணரை சந்தித்தபோது, அவர் அவருக்கு புதிய சிறுநீர்ப்பை மற்றும் உறுப்பை உருவாக்க முடியும் என்று உறுதியளித்தார்.


அவருக்கு அந்த சிறுநீரக நிபுணர் ஒரு ‘பயோனிக் உறுப்பை’ உருவாக்கி பொருத்தி உள்ளார். இதற்கு மொத்த அறுவை சிகிச்சைகளின் செலவு $ 65,0000 (இந்திய மதிப்பில் ரூ.4.48 கோடி) ஆனது.

வார்டிலின் இடது கையில் இருந்து தோல் மற்றும் தசைகள் எடுக்கப்பட்டன. அவரது காலில் இருந்து ஒரு நரம்பு எடுத்து அவரது உறுப்பு உருவாக்க பயன்படுத்தப்பட்டது. தோல் மற்றும் தசை நரம்பு சுற்றி மூடப்பட்டிருக்கும். பின்னர் உறுப்பு ஒரு உறுப்பின் பொது வடிவத்தில் கையாளப்பட்டது. பயோனிக் உறுப்புடன் கூட ஒரு உள்வைப்பு கொண்டு இணைக்கப்பட்டு உள்ளது. அது எழுச்சி அடைந்து உப்பு திரவத்தை உமிழும்.

இறுதி அறுவை சிகிச்சை கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அவருக்கு 10 நாட்களுக்கு ஒருமுறை உறுப்பில் எழுச்சி இருக்கும்
டாக்டர்களால் அதை குறைத்து கொள்ள முடியும்.

வார்ட்லி தனது நீண்ட கால காதலி பெட்ரா பியன் உடன் செக்ஸ் வைத்து கொள்வது குறித்து உற்சாகமாக உள்ளார்.

அவர் கூறியதாவது, நான் இப்போது செயல்பட முடியும் என நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். முதல் முறையாக நான் செக்ஸ் வைத்து கொள்வது எனக்கு பெரிய சாதனை போல் தோன்றுகிறது. ஆனால் பிறருக்கு இது ஒன்றும் பெரிய விஷயமில்லை. நான் ஒரு உறுப்பு இல்லாமல் 44 ஆண்டுகள் கழித்து விட்டேன், அந்த நேரத்தில் எனக்கு செக்ஸ் வாழ்க்கை இல்லை என நினைத்தேன். இந்த விஷயத்தை ஏற்று கொள்ள சில நாட்கள் பிடிக்கும்.

அமெரிக்க அறுவை சிகிச்சை நிபுணர் என்னிடம் கூறும்போது, உலகில் மிகவும் விலை உயர்ந்த அறுவை சிகிச்சை இது. பொதுவாக இந்த அறுவை சிகிச்சை மூன்று நடவடிக்கைகளை எடுக்கும். ஆனால் எனக்கு வேறு செயல்பாடுகளில் அவ்வாறு இல்லை. இது ஒரு மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள உலகின் மிக விலையுயர்ந்த உறுப்பு இது என கூறியதாக கூறினார்.-
Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!