சொகுசு வாழ்க்கைக்காக இளம்பெண்களை பாலியல் தொழிலில் தள்ளிய பிரித்தானிய பெண்..!


நைஜீரியா நாட்டு இளம்பெண்களை மந்திரவாதத்தால் வசீகரித்து ஐரோப்பா முழுவதும் பாலியல் தொழிலுக்கு தள்ளிய பிரித்தானிய நர்ஸ் தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

லண்டனின் தென் பகுதியில் குடியிருந்து வந்த Josephine Iyamu என்பவரே வூடூ மந்திரவாதிகளை பயன்படுத்தி தமது சொகுசு வாழ்க்கைக்காக இளம்பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியவர்.

53 வயதான குறித்த பெண்மணி தமது வலையில் சிக்கும் இளம்பெண்களிடம் இருந்து 30,000 யூரோ கட்டணமாக வசூலித்து வந்துள்ளார்.

மட்டுமின்றி ஐரோப்பாவுக்கு கொண்டு செல்ல மேலும் 38,000 யூரோ கட்டணமாக பெற்றுள்ளார். இதனால் சுமார் 15,000 யூரோ இந்த விவகாரத்தில் லாபம் பார்த்துள்ளார்.

நைஜீரிய இளம்பெண்களை லிபியா கடற்கரை வழியாக இத்தாலிக்கு அழைத்து சென்று அங்கிருந்து ஜேர்மனிக்கு அனுப்பி வைத்துள்ளார்.


இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட ஜேர்மன் பொலிசாருக்கு பாலியல் தொழில் நடத்தும் நபர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் பிரித்தானியரான Josephine Iyamu சிக்கியுள்ளார்.

இதனையடுத்து Josephine Iyamu மற்றும் அவரது கணவர் ஆகியோரை கடந்த ஆக்ஸ்டு மாதம் 24 ஆம் திகதி பிரித்தானிய பொலிசார் கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் இருந்து பல எண்ணிக்கையிலான மொபைல் போன்களும் 30 சிம் அட்டைகளும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் எதிர்வரும் ஜூலை மாதம் இவர்களுக்கான தீர்ப்பு வழங்கப்படும் என பர்மிங்காம் கிரவுன் நீதிமன்றம் அறிவித்துள்ளது.-Source: news.lankasri

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!