நயன்தாராவை கொண்டாடுபவர்களுக்கு அறம் படத்தின் அழ வைக்கும் பின்னணி பற்றி தெரியுமா..?


அறம் படத்தின் இயக்குனர் கோபி நயினார் (மீஞ்சூர் கோபி) முதுகில் இத்தனை வருடங்கள் குத்தியவர்கள், வசை பாடியவர்கள், அவர் பேசும் அளவிற்கு வொர்த் இல்லை என்றவர்கள், அவருக்கு சினிமாவே தெரியாது என்றவர்கள்,

அவர் கதைகள் திருடப்பட்ட காலத்தில் அவரின் நியாயத்தை கேட்க கூட மறுத்தவர்கள், இந்த படத்தில் பணிபுரிந்து கொண்டே அவருக்கு சினிமா எடுக்க தெரியவில்லை என்றவர்கள்,

அனைவரும் இன்று ஒன்று சேர்ந்து ஒற்றை குரலில் அறம் படத்தை கொண்டாடுவதில் தான் கோபியின் வெற்றி அடங்கியிருக்கிறது என்று அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டு பேசுகின்றனர்..

பெருந்தன்மையால் மட்டுமே இந்த உலகை வெல்ல முடியும் என்பதை உன் வாழ்வு பிறருக்கு கற்றுத்தரட்டும். நிமிர்ந்து வீர நடை போடு தோழா, இனி வெல்வதற்கு ஒரு உலகம் உனக்காக காத்திருக்கிறது.

நேற்று அவரது மகன் பொன் தமிழன் எழுதிய வரிகள் இங்கே உங்களுக்காக :

அவர் அப்படித்தான்…அவமானங்களை ஆடையாக எண்ணி


போராட்டத்தை தன் மேனியாக்கிக்கொண்டவர்…

ஆதலால் அவர் அப்படித்தான்…துரோகங்களை செருப்பாக எண்ணி

இலட்சியங்களை செதுக்கிக்கொண்டிருப்பவர்…

அதனால் அவர் அப்படித்தான்…மண்ணை நேசிப்பதுப்போல் மனிதத்தின் வழியே

மதங்களை மறுத்து பௌத்த நிழலில் மனிதர்களை சுவாசிக்கிறார்…

அய்யோ! அவர் அப்படித்தான்… நீங்கள் அவருடையதை பிடுங்கிக்கொண்டு ஆர்ப்பரிக்கலாம்

ஆனால் அடுத்த ஆராய்ச்சிக்கு செல்ல அவர் தயங்கியதேயில்லை..,


கலகக்கார கலைஞனிடம் பஞ்சம் ஏது?…

என்னிடம் அவரைப் பற்றி யாராவது கேட்டால் நான் சொல்வது இப்படித்தான்… என் தந்தை அப்படித்தான்.. என முடிகிறது அந்த கவிதை..

ஒருவர் எந்த அளவுக்கு அவமானத்தை சந்திக்கிறாரோ அப்பொழுது அவருடைய வெற்றிக்குறிய தீ பிழம்பு அவர்களுக்கு தெரியாமலேயே வெறியுடன் வெற்றியும் சேர்ந்து உற்சாக டானிக்குடன் வளர்ந்து முன்னுக்கு வர வைக்கிறது. அதற்கு உதாரணம் தான் கோபி நயினார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!