ஸ்டெர்லைட் ஆலைக்கு வக்காலத்து வாங்கும் பாபா ராம்தேவ்…!


தேசத்தின் வளர்ச்சிக்கு தொழிற்சாலைகள்தான் கோயில்; ஸ்டெர்லைட் ஆலை மூடியிருக்கக் கூடாது என்று வேதாந்த நிறுவனர் அனில் அகர்வாலை சந்தித்தப்
பிறகு யோகா குரு பாபா ராம் தேவ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆடையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் நடத்திய போராட்டத்தின் 100-வது நாளின்போது, பயங்கர கலவரம் ஏற்பட்டது. பொதுமக்கள்மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான விவகாரம் தேசிய அளவில் கவனிக்கப்பட்டது. துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.

பொதுமக்களின் உணர்வுகளுக்கும் கருத்துக்களுக்கும் மதிப்பு அளித்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசாணை வெளியிடப்படுவதாக தமிழக அரசுதெரிவித்திருந்தது. இதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்திருந்தனர்.


இதனைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு சென்ற தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி, ஆலைக்கு சீல் வைத்தார். மேலும் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதாக நோட்டீசும், ஆலையின் கதவில் ஒட்டப்பட்டது.

இந்த நிலையில், யோகா கலை பயிற்சி அளிக்க யோகா குரு பாபா ராம் தேவ் லண்டன் சென்றார். அங்கு, ஸ்டெர்லைட் ஆலையின் உரிமையாளர் அனில்
அகர்வாலை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பு குறித்து பாபா ராம்தேவ், தனது டுவிட்டர் பக்கத்தில், என்னுடைய லண்டன் பயணத்தின்போது அனில் அகர்வாலைச் சந்தித்தேன். தேசக்கட்டுமானத்தில் லட்சக்கணக்கான வேலைகளை உருவாக்குவதன் மூலமும், பொருளாதார செழிப்பை வைத்திருப்பதன் மூலமும், தேச கட்டுமானத்தில் பங்காற்றும் அவருக்கு மரியாதை செய்கிறேன்.

உலகளவில் உள்ள சதிகாரர்கள், தென்னிந்தியாவில் உள்ள வேதாந்தா ஆலைக்கு எதிராக அப்பாவி மக்கள் மூலம் கிளச்சியை ஏற்படுத்தி உள்ளனர். தேசத்தின்
வளர்ச்சிக்கு தொழிற்சாலைகள்தான் கோயில், தொழிற்சாலைகள் மூடியிருக்கக் கூடாது என்று பதிவிட்டுள்ளார்.-Source:tamil.asianetnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!