வருமான வரித்துறையினரின் கடமையுணர்ச்சியால் அதிர்ச்சியடைந்த ஆசிரியர்… நடந்தது என்ன?


சசிகலா மற்றும் அவரது உறவினர் வீடுகளில் அதிரடியாக சோதனை மேற்கொண்ட வருமான வரித்துறையினர் ஆடிட்டர் வீட்டிற்கு பதில் ஆசிரியர் வீட்டில் நுழைந்து சோதனை நடத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

வருமான வரித்துறையினர் சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் சோதனை மேற்கொண்டனர். சசிகலாவுக்கு சொந்தமான அலுவலகங்கள் மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான அலுவலகங்கள் என அனைத்து இடங்களிலும் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர்.

இந்த வருமான வரித்துறையினர் நடத்திய சோதனை தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. நேற்று வரை வருமான வரித்துறையினர் கைப்பற்றிய ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் கடலூரில் உள்ள ஆடிட்டர் ஒருவர் வீட்டில் சோதனை செய்வதற்கு பதில் ஆசிரியர் வீட்டில் சோதனை நடத்திய சம்பவம் தெரியவந்துள்ளது.

ஆசிரியர் ஒருவர் வீட்டில் சம்பந்தம் இல்லாமல் நுழைந்த வருமான வரித்துறையினர் அவரை வங்கி வங்கியாக அழைத்து சென்று விசாரித்துள்ளனர்.

மாலை சென்னையில் இருந்து தகவல் வந்ததும் தாங்கள் வீடு மாறி வந்து விட்டோம், மன்னித்து விடுங்கள் என கூறி பின்னர் ஆடிட்டர் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!