பசிக் கொடுமையால் சிக்கன் உணவு விளம்பரத்தை நாவால் நக்கிய சிறுவன்..! எங்கு தெரியுமா..?


பிலிப்பைன்ஸ் நாட்டில் பசியால் வாடிய சிறுவன் சிக்கன் உணவு விளம்பர படத்தை நாவால் நக்கிய காட்சிகள் வீடியோவாக வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டின் Bayambang பகுதியில் நடந்த இச்சம்பவத்தை சுற்றுலாப்பயணி ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவேற்றியுள்ளார்.

குறித்த வீடியோ காட்சிகளை இதுவரை 11 மில்லியன் முறை உலகெங்கிலும் உள்ள மக்கள் பார்வையிட்டுள்ளனர்.

வீடியோவில் பதிவாகியுள்ள 3 வயது சிறுவனின் குடும்பமானது அங்குள்ள பிரபலமான துரித உணவு விடுதியில் காலை உணவருந்த முடிவு செய்து புறப்பட்டுள்ளனர்.

ஆனால் அவர்கள் சென்ற நேரம் குறித்த உணவகமானது திறந்திருக்கவில்லை. இதனால் அந்த சிறுவனின் குடும்பத்தினர் உணவகத்தின் வெளியே காத்திருந்துள்ளனர்.

அப்போது அந்த 3 வயது சிறுவன் உணவகத்தின் அருகாமையில் நடந்து நின்றுள்ளான். சிக்கன் உணவு என்றால் உயிர் என கூறப்படும் அந்த சிறுவன் திடீரென்று அந்த உணவக விளம்பரம் முன்பு மண்டியிட்டு நாவால் நக்கியுள்ளான்.

இந்த காட்சிகள் சிறுவனின் குடும்பத்தாரை மட்டுமல்ல அந்த உணவ மேலாளரையும் அதிர வைத்துள்ளது.

இதனையடுத்து Jollibee என்ற அந்த சிக்கன் உணவகம் குறித்த சிறுவனுக்கு இலவசமாக பக்கெட் சிக்கனை வழங்கியுள்ளது.-Source: news.lankasri

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!