30 ஆண்டு போராட்டம் வெற்றி: முதல் முறையாக கார் ஓட்டும் பெண்கள்!

சவுதி நாட்டில் பெண்கள் கார் ஓட்டுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இன்று முதல் பெண்கள் உற்சாகமாக கார் ஒட்டினர்.

சவுதி நாட்டைப் பொருத்த வரையில், பெண்கள் கார் ஓட்டுவது சமூக கேடு என்பது அங்குள்ள பழைமைவாத மதகுருமார்களின் நம்பிக்கை. இதன் காரணமாக சவுதியில் பெண்கள் கார் ஓட்டுவதற்கு தடை இருந்து வந்தது. இதனை எதிர்த்து அந்நாட்டில் 1990ம் ஆண்டிலிருந்து பெண்கள் கார் ஓட்டுவதற்கு உரிமைகோரி வாதாடி போராடி வருகின்றனர்.

இதனிடையே சவுதியில் பெண்களும் ஆண்களும் ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என்று மன்னர் சல்மான் ஆணை வெளியிட்டதாக செய்திகள் வந்தன. இது குறித்து உள்துறை அமைச்சகத்தின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட கருத்தில், சவூதியில் பெண்கள் பாதுகாப்பாக கார் ஓட்டுவதற்கு பயிற்சியளிக்கப்படும் என்றும், இதனால், சாலை விபத்துக்களினால் ஏற்படும் உயிர் மற்றும் பொருளாதார சேதங்கள் நிச்சயம் குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சவுதி நாட்டில் பெண்கள் கார் ஓட்டுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நேற்றுடன் முடிவடைந்தது. இன்று முதல் பெண்கள் சுதந்திரமாக கார் ஓட்டலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் உற்சாகமடைந்த பெண்கள், இன்று காலை மகிழ்ச்சிப் பொங்க கார் ஓட்டினர்.-Source:tamil.eenaduindia


இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.