சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் கோவாவில் ” செல்பி ” எடுக்க திடீர் தடை

இந்தியாவின் மிகச்சிறிய மாநிலமாக இருந்துவரும் கோவா, கடந்த 1961-ஆம் ஆண்டு வரை, போர்ச்சுக்கீசியர்களின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாகவே இருந்தது. புகழ்பெற்ற கடற்கரை, இறைவழிபாட்டுத் தலங்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடக்கலைகள் உள்ளிட்டவற்றை தன்வசப்படுத்தியிருக்கும் கோவா, இந்தியாவின் சிறந்த சுற்றுலாத் தலமாக போற்றப்படுகிறது.

வடக்கு திசையில், மஹாராஷ்டிரா மாநிலத்தையும், கிழக்கில் கர்நாடகாவையும் மற்றும் தெற்கில் அரபிக்கடலையும் எல்லைகளாக கொண்டு, கொங்கன் கடற்பகுதியில் அமைந்துள்ளது கோவா மாநிலம். இயற்கை வளமும், மண்வளமும் சிறந்து விளங்குவதால், ஆண்டு முழுவதும், கோவாவிற்கு சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். .

இந்தநிலையில், கோவாவுக்கு பல வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். நீச்சல், ஆபத்தான நீர் சாகசங்களில் ஈடுபடும் போது செல்போன்களில் செல்பி எடுக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது.

இதனால் உயிரிழப்புக்கள் அதிகளவில் நடக்கிறது. இதை தடுககும் வகையில் தனியார் பாதுகாப்பு வீரர்களை மாநில அரசு நியமித்துள்ளது. கோவா அரசு, 24 இடங்களை, அபாய பகுதிகளாக அறிவித்து உள்ளது.-Source:dailythanthi


இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.