35 வயது மேல் குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு இப்படி ஒரு ஆபத்தா..? இத முதல்ல படிங்க..!


35 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு இதய பிரச்சினைகள் அதிகமாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

குடும்ப சூழ்நிலையால் தாமதமாக திருமணம் செய்வது, வருவாய்க்கு ஏற்றபடி குழந்தை பேறுவை தள்ளிப்போடுவது என நம்மில் பலர் உள்ளனர்.

வாழ்க்கையில் எப்படி பணம் சேர்ப்பது, வீடு கட்டுவது, குடும்பத்தை கவனிப்பது போன்ற யோசனையே பல நிகழ்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது.

இன்னிலையில், தாமதமாக குழந்தை பெற்றுக்கொள்ளும் வழக்கம் தற்போது பேஷனாக மாறிவருகிறது.

இதன் காரணமாக திருமணமான தம்பதிகளிடையே விரைவில் குழந்தை பெற்றுக்கொள்ளும் ஆவலை ஊக்குவிப்பதோடு, குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளிப்போடும் மனப்பான்மையை மகப்பேறு மருத்துவர்கள் தொடர்ந்து கண்டித்து வருகின்றனர்.

குழந்தை பெற்றுக்கொள்ளும் வயது ஏற ஏற பெண்களின் ஹார்மோன் மாற்றங்களுக்கு ஏற்ப அவர்களின் குழந்தை பெரும் திறனும் பாதிப்புக்கு உள்ளாகிறது. வயது ஆக ஆக எப்படி செயலும் திறனும் குறையத்தொடங்குமோ, அதேபோல 35 வயதுக்கு மேல் ஆகும்போது, குழந்தையை தாங்கும் கருப்பை தனது போஷாக்கையும், பிரசவிக்கும் திறனை இழக்கக்கூடும்.

தாயின் வயதை பொறுத்தே கருவில் வளரும் குழந்தையின் உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சி, மற்றும் உள்ளுறுப்பு வளர்ச்சிகள் நிர்ணயிக்கப்படுகின்றன என்பது கனடாவின் ஆல்பர்ட்டா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்விற்காக, எலிகளிடையே இச்சோதனை நடத்தப்பட்டது.

இதுகுறித்து ஆல்பர்ட்டா பல்கலைக்கழக முதன்மை ஆராய்ச்சியாளரான சாண்ட்ரா டி டேஜெஜ் கூறுகையில்,

ஒரு 35 வயதுடைய பெண்ணின் கருப்பைக்கு சமமான திறன் கொண்ட வயதான எலிகளிடையே நடத்தப்பட்ட ஆய்வில், வயது ஆக ஆக பெண்களின் கருப்பை ஆரோக்கியம் நிறைந்து, உடற்கோளாறு இல்லாமல் குழந்தையை பெற்று தரும் திறனை படிப்படியாக இழந்து வருவது நிரூபணமாகியுள்ளது.

குழந்தைக்கு இருதய பிரச்சனைகள் உண்டாகும் அபாயமும் அதிகம் உள்ளதாக தெரிகிறது. மேலும் நடுத்தர மக்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு உண்டாகும் ஆரோக்கிய குறைபாடுகளை குறித்து மேலும் ஆராய உள்ளேன் என்றார்.-0Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!