பீகாரில் சிறுவன் சுட்டுக்கொலை: காவலாளி செய்த வெறிச்செயல்… அதிர வைத்த காரணம்..!


பீகார் மாநிலம், ககாரியா மாவட்டம், ஷெர்கார் கிராமத்தில் ஒரு தோப்பில் சத்யம் என்ற 10 வயது சிறுவன் அத்துமீறி நுழைந்து அங்கு உள்ள மாமரத்தில் மாங்காய் திருடி உள்ளான். அப்போது அங்கு வந்த காவலாளி ராம யாதவ், அந்த சிறுவனை மரத்தில் இருந்து கீழே இறங்கி வருமாறு சத்தம் போட்டும் அவன் இறங்கவில்லை.

இதில் ஆத்திரம் அடைந்த காவலாளி ராமயாதவ், சிறுவன் சத்யமை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தி விட்டு தப்பினார்.

இதில் அந்த சிறுவன் தலையில் குண்டு பாய்ந்து, சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிணம் ஆனான்.

இதற்கிடையே துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டு அந்தப் பகுதி மக்கள் திரண்டு வந்து, சிறுவனை சுட்டுக்கொன்ற காவலாளி மீது நடவடிக்கை எடுத்தால்தான் அவனது உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்துச்செல்ல அனுமதிப்போம் என கூறினர். போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி, குற்றவாளியை கைது செய்வதாக உறுதி அளித்தனர். அதைத் தொடர்ந்து சத்யம் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவுசெய்து, குற்றவாளியை தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.–Source: dailythanthi

0* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!