விற்பனையில் சியோமி முதலிடமாக இருந்தாலும் ‘இதில்’ சாம்சங் தான் டாப்..!!


சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி காலாண்டு வரையிலான விற்பனையில் இந்தியாவில் முதலிடம் பிடித்திருக்கும் நிலையில், இன்ஸ்டால் பேஸ் அடிப்படையில் சாம்சங் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இந்தியாவை சேர்ந்த சைபர் மீடியா ரிசர்ச் (சி.எம்.ஆர்.) எனும் ஆய்வு நிறுவனம் வெளியிட்டிருக்கும் தகவல்களின் படி இந்திய சந்தையில் பயன்படுத்தப்படும் சாதனங்களில் சாம்சங் நிறுவன சாதனங்கள் மட்டும் 30.8% ஆக இருக்கிறது. கடந்த இரண்டு காலாண்டுகளில் சியோமி, விவோ மற்றும் ஒப்போ போன்ற நிறுவனங்கள் விற்பனையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

சியோமி, விவோ மற்றும் விவோ நிறுவன சாதனங்களை முறையே 8.53%, 5.63% மற்றும் 5.02% பேர் பயன்படுத்தி வருகின்றனர். அதிகம் பேர் பயன்படுத்தும் நிறுவனங்களில் ஒற்றை இந்திய நிறுவனமாக மைக்ரோமேக்ஸ் இருக்கிறது. மைக்ரோமேக்ஸ் நிறுவன மொபைல்போன்களை 8.63% பேர் பயன்படுத்துகின்றனர்.

சி.எம்.ஆர். பிக் டேட்டா அனாலடிக்ஸ் திட்டமான மொபைலிஸ்டிக்ஸ் நடத்திய மற்றொரு ஆய்வில் இந்தியாவின் ஏழு மாநிலங்களில் மட்டுமே ஸ்மார்ட்போன் சந்தை 50%-க்கும் அதிகமாக இருக்கிறது. இந்த ஆய்வில் மொபைல் போன்கள், ஸ்மார்ட்போன் மற்றும் ஃபீச்சர் போன்களின் மார்ச் மாதம் வரையிலான எண்ணிக்கை கணக்கிடப்பட்டன.


மொத்தம் 41.5 கோடி மொபைல் போன் இன்ஸ்டாலேஷன்களில், ஸ்மார்ட்போன் மட்டும் 45.7% மொபைல் சந்தையை ஆக்கிரமித்து இருக்கும் நிலையில் இந்தியாவில் தொடர்ந்து ஃபீச்சர்போன் விற்பனை அமோகமாக இருந்து வருகிறது.

ஸ்மார்ட்போன் விற்பனையில் கேரளா மாநிலம் 64.7% விற்பனையை பெற்று முதலிடம் பிடித்திருக்கிறது. இதில் அசாம் மாநிலம் 26.8% விற்பனையுடன் பட்டியலில் இறுதி இடத்தில் இருக்கிறது. கேரளாவை தொடர்ந்து பாதிக்கும் அதிக ஸ்மார்ட்போன் விற்பனையை பதிவு செய்த மாநிலங்களின் பட்டியலில் டெல்லி (54.3%), குஜராத் (58.3%), இமாச்சல் பிரதேசம் (53.6%), மகாராஷ்ட்ரா (55.4%), பஞ்சாப் (57.4%) மற்றும் தமிழ் நாடு (53.8%) இருக்கின்றன.

அசாம், மத்திய பிரதேசம், பீகார், சட்டீஸ்கர் மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் மொபைல் பயன்படுத்துவோரில் மூன்றில் ஒருவருக்கும் குறைவானோர் மட்டுமே ஸ்மார்ட்போன் பயன்படுத்தி வருவது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.source-maalaimalar

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!