கால்களை இழந்த சிரியா சிறுமி – காலி டின்களை கால்களாக பயன்படுத்தும் பரிதாபம்..!!


சிரியாவை சேர்ந்த மயா மேரி (8) என்ற சிறுமிக்கு இருக்கும் ஒரே ஆசை தனது தோழிகளுடன் நடப்பதும் விளையாடுவதும் தான். மழை வந்தால் சேறும் சகதியுமாகிவிடும் ஒரு கூடாரத்தில் தான் மாயா மேரியும் அவளது குடும்பத்தினரும் வசிக்கிறார்கள்.மாயா மேரி அபூர்வ நோயால் பாதிக்கப்பட்டு கால்களை இழந்தவர்

இந்த நிலையில் அவளுக்கு செயற்கைக் கால்கள் வாங்குவது குறித்து அவர்களால் நினைத்துக்கூட பார்க்க இயலாது. மாயாமேரியின் தந்தை காலி டின்களைக் கொண்டு செய்து கொடுத்துள்ள “செயற்கைக் கால்களின்” உதவியுடன் அவள் தினமும் 300 மீட்டர்கள் நடந்து பள்ளிக்கு செல்கிறார்.

சில நேரங்களில் களைத்துப் போகும்போது அவள் தனது கைகளைப் பயன்படுத்தி தவழ்ந்து செல்கிறார்.இதில் பிரச்சினை என்ன என்றால், அவளது கைகளிலும் பிரச்சினை உள்ளதுதான். யாராவது தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் தனக்கு உதவ மாட்டார்களா, மீண்டும் நடக்க முடியுமா என மாயா மேரி காத்திருக்கிறார்.source-dailythanthi

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!