டாஸ்மாக்குக்கு எதிராக விவசாயிகள் எடுத்த முடிவு..? விழி பிதுங்கும் தமிழக அரசு..!


வரும் ஜனவரி 21ஆம் தேதி முதல் தென்னை மரங்களில் இருந்து கள் இறக்கப்படும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்துள்ளார்.

தமிழர் வாழ்வில் ஓர் அங்கமான உணவே “கள்” என பலரும் கூறும் வேலையில், அது தமிழக பொருளாதாரத்தில் வகித்த பாத்திரம் மிகவும் கூர்ந்து நோக்கத்தக்கது.

சுதந்திரத்துக்கு முன், தமிழகத்தில் 50 கோடி பனை, தென்னை மரங்கள் இருந்தன. கள், கருப்பட்டி என கிராமப் பொருளாதாரம் வலுவாக இருந்தது.


தென்னை, பனை மர வாழ்வாதாரம் நசுக்கப்பட்டதால் தற்போது வெறும் 5 கோடி தென்னை மரங்களும், நான்கரை கோடி பனை மரங்களுமே தமிழகத்தில் மிஞ்சி உள்ளது.

இதை நம்பி 10 லட்சம் பனைத் தொழிலாளிகள் மற்றும் 50 லட்சம் விவசாயிகளின் வாழ்வு உள்ளதது.

கள்ளுக்கு எதிரான அரசின் நடவடிக்கையாள் செங்கல் சூளைகளுக்காக பனை மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன.

108 உலக நாடுகளில் “கள்” பயன்பாட்டில் உள்ளது என்றும், இந்தியாவில் தமிழகத்தைச் சுற்றியிருக்கும் எல்லா மாநிலங்களிலும் “கள்” உண்டு .

இந்திய அரசியல் சாசனத்தின் 47வது பிரிவின் படி, உணவுப்பொருளில் கள் உள்ளதாகவும், அதனை போதை மது வகையில் சேர்க்க முடியாது என்று நல்லசாமி குறிப்பிட்டுக்காட்டுகிறார்.


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்தில் கடந்த 1987ஆம் ஆண்டு கள்ளுக்குத் தடை விதிக்கப்பட்டது. கள்ளில் கலப்படம் செய்ததாகவும், கள் குடித்தவர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்பதாக் கூறியும் அரசு, கள்ளுக்குத் தடை விதித்தது.


வரும் ஜனவரி 21ஆம் தேதி முதல் கள் இயக்க ஆதரவாளர்கள், அவரவருக்குச் சொந்தமான தோட்டத்தில் தென்னை மரங்களில் இருந்து அவரவர் பயன்பாட்டுக்குத் தேவையான கள் இறக்கிக் குடித்துக் கொள்வார்கள்.

இதன் மீது அரசு நடவடிக்கை எடுத்தால் அதை சட்டப்படி சந்திப்போம்’ என்று கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!