தமிழகத்தில் பெண்களுக்கு சம உரிமை இதில் தானா..? கிண்டல் செய்த பக்கத்து மாநிலம்..!!


திராவிட அரசுகளின் சரித்திர சாதனையால் ஆண்களுக்கு நிகராக பெண்களும் மது போதைக்கு அடிமையாகும் அவல நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது தமிழகம்.

தமிழ்நாட்டில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளை நடத்த விதிக்கப்பட்ட தடை நகர்ப் பகுதிகளுக்கு பொருந்தாது என்றும், அப்பகுதிகளில் மதுக்கடைகளை தாராளமாக நடத்திக் கொள்ளலாம் என்றும் உச்சநீதிமன்றம் விளக்கமளித்திருக்கிறது.

மதுக்கடைகளுக்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய சட்டப் போராட்டத்தின் பயனாக தமிழகத்தில் 3321 மதுக்கடைகள் உட்பட நாடு முழுவதும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் செயல்பட்டு வந்த 90,000 மதுக்கடைகள் மூடப்பட்டன.


இதனால் மது வணிகம் மூலம் கிடைத்த வருவாய் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழக அரசு சட்டவிரோத வழிகளில் மதுக்கடைகளை திறந்தது.

அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பாட்டாளி மக்கள் கட்சி வழக்குத் தொடர்ந்த நிலையில், தமிழக ஆட்சியாளர்கள் உச்சநீதிமன்றத்திற்கு சென்று நெடுஞ்சாலையோரங்களில் மதுக்கடைகளை திறக்க அனுமதி பெற்றுள்ளனர்.

நகர்ப்பகுதிகளில் நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளை திறக்கலாம் என்று அனுமதி அளித்துள்ள உச்சநீதிமன்றம் அதற்காக அளித்துள்ள விளக்கம் வியப்பாக உள்ளது.


‘‘நெடுஞ்சாலைகள் எனப்படுபவை மாநகரங்களையும், நகரங்களையும், கிராமங்களையும் இணைப்பவை தான்.

நகரப்பகுதிகளுக்குள் செல்லும் நெடுஞ்சாலைகளில் உரிமம் பெற்று அமைக்கப்பட்டுள்ள மதுக்கடைகளை 15.12.2016 அன்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு தடை செய்யவில்லை.

இது நாடு முழுவதும் உள்ள நகரப் பகுதிகளுக்கு பொருந்தும்’’ என்று கூறித் தான் நகரப்பகுதிகளில் மதுக்கடைகளை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.


இது உச்சநீதிமன்றம் ஏற்கனவே அளித்த இரு தீர்ப்புகளுக்கும், இயற்கை நீதிக்கும் எதிராக உள்ளது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஒருபுறமிருக்க, தமிழகத்தில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் ஏராளமாக இருக்கும் நிலையில், அவற்றில் கவனம் செலுத்தாத பினாமி அரசு மதுக்கடைகளை திறப்பதில் மட்டும் கவனம் செலுத்துகிறது.

நீட் தேர்வு திணிக்கப்பட்டதால் தமிழ்நாட்டு மானவர்கள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி விலக்கு பெற நடவடிக்கை எடுக்காத முதலமைச்சர் மது விற்பனைக்காக மட்டும் துடிப்பதிலிருந்தே அவர் யாருக்காக ஆட்சி நடத்துகிறார் என்பதை உணர முடியும்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!