ரஷ்யா செல்கிறார் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன்..!


ரஷ்ய அதிபரின் அழைப்பை ஏற்று வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் வரும் செப்டம்பர் மாதம் ரஷ்ய செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் – அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இடையேயான சந்திப்பு கடந்த ஜூன் 12-ந் தேதி சிங்கப்பூர் சென்டோசா தீவில் உள்ள கேபெல்லா ஹோட்டலில் நடைபெற்றது.

உலக நாடுகள் உற்று நோக்கிய இந்த சந்திப்பு சுமார் 48 நிமிடங்கள் நீடித்தது. இந்த சந்திப்பின் போது, அணு ஆயுத கைவிடல், பொருளாதார பிரச்சினை ஆகியவை குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். இதில் அணு ஆயுதத்தை ஒழித்திட இரு தரப்பிலும் உறுதி ஏற்கப்பட்டது.

இந்நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அழைப்பின் பேரில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் வரும் செப்டம்பர் மாதம் ரஷ்யா செல்லவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த பயணத்தின் போது அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் நடத்திய பேச்சுவார்த்தை குறித்து வடகொரிய அதிபர், ரஷ்ய அதிபருடன் விவாதிக்க உள்ளதாக வட கொரிய செய்தி ஊடங்கள் கூறி வருகின்றன.

அமெரிக்காவுடனான அணு ஆயுத கைவிடல் ஒப்பந்தத்தையடுத்து வடகொரிய அதிபரின் ரஷ்ய பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!