பித்த வெடிப்பை இயற்கை முறையில் போக்குவது எப்படி?


நீங்கள் சில வகையான பாதணிகளைத் தவிர்த்து பாதங்களை மூடியவாறு அணிவதற்கு காரணம் உங்கள் கால்களில் உள்ள பித்தவெடிப்புக்களே.

வெடித்த பாதங்கள் கால்களில் அழகிய தோற்றத்தை கெடுத்து விடும்.

உங்கள் சமையலறையில் உள்ள பொருட்களை வைத்தே இலகுவாக பித்த வெடிப்பை குணப்படுத்த முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?

பித்த வெடிப்பை குணப்படுத்துவதற்கான இயற்கை முறைகள்.

1. ஈரலிப்பாக வைத்திருத்தல்.

3 தேக்கரண்டி தேன்மெழுகுடன், ¼ கப் தேங்காய் எண்ணெய், ¼ கப் சீயா பட்டர் சேர்த்து கொதிக்க வைத்து, கலந்து எடுத்துக் கொள்ளவும்.

இந்த கிரீமை தினமும் ஒரு தடவை தடவி வருவதனால் பாதம் ஈரலிப்பாக இருக்கும்.

2. பெட்ரோலியம் ஜெலி பயன்படுத்தல்.

பெட்ரோலிய ஜெலி பயன்படுத்துவதனால் பாதத்தை ஈரலிப்பாக வைத்திருப்பதுடன், பித்த வெடிப்பு வராமல் தடுக்கிறது.

3. பஞ்சு.

இரவு நேரங்களிலும், பாதணிகளை அணியும் போதும் பெட்ரோலியம் ஜெலியை பூசி பருத்தி காலுறைகளை அணிவதனால் பாதத்தில் வியர்வையை தடுத்து, சுவாசத்தை அதிகரிக்கும்.

4. தேன்.

ஒரு கப் தேனும், 2 மேசைக்கரண்டி சூடான முழு பால், ½ தோடம்பழத்தின் சாறு போன்றவற்றைக் கலந்து பாதத்தில் பூசி, 45 நிமிடங்களின் பின்பு கழுவி வருவதனால் பித்த வெடிப்புகள் குணமடைவதுடன், பாதம் ஈரலிப்பாகவும் இருக்கும்.

5. வாழைப்பழம்.

முதிர்ந்த வாழைப்பழத்தை பசையாக எடுத்து பாதங்களில் பூசி, 15 நிமிடங்கள் வரை ஊற வைத்த பின்பு, குளிர்ந்த நீரில் 10 நிமிடங்கள் வரை பாதத்தை வைத்து நன்றாக கழுவுவதனால் வெடிப்புக்கள் குணமாவதுடன், ஈரலிப்பாகவும் இருக்கும்.

6. இறந்த கலங்களை நீக்குதல்.

இறந்த கலங்களை பாதத்தில் இருந்து நீக்குவதன் மூலம் ஈரப்பதத்தை அதிகளவில் உறிஞ்சுவதற்கு உதவும்.

சூடான நீரில் கால்களை ஊற வைத்த பின்பு, ஆற்றுக் கற்களால் பாதத்தை தேய்ப்பதன் மூலம் இறந்த கலங்களை இலகுவாக நீக்கி விட முடியும்.

இந்த முறைகளைப் பின்பற்றி உங்கள் கால்களின் மென்மையையும், அழகையும், பாதுகாப்பையும் பேணுங்கள்.- © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!