வரலாற்று சிறப்பு மிக்க டிரம்ப்-கிம் ஜாங் உன் சந்திப்பின் பின்னணியில் 2 சிங்கப்பூர் தமிழர்கள்…!


வரலாற்று சிறப்புமிக்க மற்றும் உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த சந்திப்பு வெற்றிகரமாக நடந்து முடிந்ததற்கு பின்னால் இரண்டு தமிழர்கள் இருந்தனர் என்பது தமிழர்களுக்கு பெருமை சேர்க்கக்கூடிய விஷயமாக அமைந்துள்ளது.

தென் கொரியா மற்றும் அமெரிக்காவை அச்சுறுத்தும் விதமாக அணு ஆயுத சோதனை, கண்டம் விட்டு கண்டம் தாக்கும் ஏவுகணை சோதனைகளை வடகொரியா தொடர்ந்து மேற்கொண்டு வந்தது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்துவந்தன.

ஆனால், உலக நாடுகளின் எதிர்ப்புகளை எல்லாம் பொருட்படுத்தாத வடகொரியா, தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளையும் கண்டம் விட்டு கண்டம் தாக்கும் ஏவுகணை சோதனையையும் நடத்திவந்தது. இதையடுத்து வடகொரியா மீது ஐநா பொதுச்சபை மற்றும் பாதுகாப்பு சபை ஆகியவை பலமுறை பொருளாதார தடை விதித்தது. ஆனாலும் வடகொரியா அணு ஆயுத சோதனைகளை நிறுத்தவில்லை.

டிரம்ப் மற்றும் கிம் ஜாங் உன்னுக்கு இடையேயான சந்திப்பு உறுதியானதும், ஒட்டும்மொத்தமாக அணு ஆயுத சோதனைகளையும் ஏவுகணை சோதனைகளையும் நிறுத்துவதாக தெரிவித்துள்ள வடகொரிய அதிபர், அணு ஆயுத சோதனை தளத்தை மூட உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து சிங்கப்பூரில் உள்ள செண்டோசா தீவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆகியோரிடையேயான சந்திப்பு வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.


வரலாற்று சிறப்புமிக்க மற்றும் உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த சந்திப்பு வெற்றிகரமாக நடந்து முடிந்ததற்கு பின்னால் இரண்டு தமிழர்கள் இருந்தனர் என்பது தமிழர்களுக்கு பெருமை சேர்க்கக்கூடிய விஷயமாக அமைந்துள்ளது.

அமெரிக்கா மற்றும் வடகொரியா ஆகிய இருநாடுகளுக்கும் சிறந்த நட்பு நாடாக விளங்கியது சிங்கப்பூர். அதனால் தான் டிரம்ப்-கிம் சந்திப்பு சிங்கப்பூரில் நடத்தப்பட்டது. அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் சிறந்த நட்புநாடுகளாக ஒரு சில நாடுகள்தான் இருக்கின்றன. அதில் சிங்கப்பூர் மிகவும் முக்கியமாகும். அதனால்தான் இந்தச் சந்திப்பு சிங்கப்பூரில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த சந்திப்பு வெற்றிகரமாக நடந்து முடிந்ததற்கு, சிங்கப்பூர் அரசின் அமைச்சரவையில் உள்ள விவியன் பாலகிருஷ்ணன், கே.சண்முகம் ஆகிய இரண்டு தமிழர்களின் பங்களிப்பும் அவர்கள் மேற்கொண்ட பணிகளும் முக்கிய காரணம்.

டிரம்ப்-கிம் ஜான் உன் சந்திப்பு விவரம் அறிவிக்கப்பட்டதும், அதற்கான பணிகளில் அதிதீவிரமாக ஈடுபட்டவர் பாலகிருஷ்ணன். அமெரிக்காவிற்கு வடகொரியாவிற்கும் சென்று பயணித்து, டிரம்ப் மற்றும் கிம் ஜாங் உன்னை சந்தித்து இந்த சந்திப்பை உறுதி செய்தார். டிரம்ப் திடீரென இந்த சந்திப்பை ரத்து செய்வதாக அறிவித்ததை அடுத்து, அமெரிக்காவிற்கு சென்று டிரம்பை நேரில் சந்தித்து சமாதானம் செய்து சந்திப்பை உறுதி செய்து வெற்றிகரமாக நடத்த துணையாக இருந்துள்ளார் பாலகிருஷ்ணன்.

அதேபோல, உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த சந்திப்பு வெற்றிகரமாக முடிந்ததற்கு மற்றொரு காரணமாக திகழ்ந்தவர் அமைச்சர் சண்முகம். இந்த சந்திப்பை நடத்தி முடிக்கும் பொறுப்பு இவரிடம் அளிக்கப்பட்டு இருந்தது. டிரம்ப் மற்றும் கிம் ஜாங் உன் ஆகிய இருவருக்கும் தங்குமிடங்களை ஏற்பாடு செய்து பாதுகாப்பு அளிப்பது ஆகிய பணிகளை சிறப்பாக மேற்கொண்டதோடு, சந்திப்பை சுமூகமாக நடத்தி முடிக்க பணியாற்றியுள்ளார் சண்முகம்.

இந்த சந்திப்பு தொடர்பாக பேசிய சண்முகம், இந்த சந்திப்பின் மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான பகை தீர்ந்து விடுமா என்பது தெரியாது. ஆனால் நட்பு மலர இது முதல் படியாக இருக்கும் என தெரிவித்தார்.-Source: tamil.asianetnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!