அமெரிக்காவில் விசித்திரம் – தங்கத்துகள் பூசப்பட்டு பரிமாறப்படும் கோழிக்கறி…!


அமெரிக்காவில் பார் ஒன்றில் தங்கத்துகள் பூசப்பட்ட கோழிக்கறி பரிமாறப்பட்டு வருகிறது. நியூயார்க் நகரில் உள்ள பார் ஒன்று, மது அருந்த வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க என்ன செய்வதென யோசித்தது. அந்த ”பொன்னான” யோசனையின் பலனாக சமைத்த கோழிக்கறியை தங்கத் துகள்களைத் தூவி பரிமாற முடிவெடுத்தது.

வழக்கமாக மசாலா தடவி பொறித்து எடுக்கும் கோழிக்கறி மீது, தவிடு போன்ற தங்கத்தில் தயாரான கிரீமில் தோய்க்கப்படுகிறது. வழக்கமாக பொன்னிறமாக பொறிக்கும் கோழிக்கறியை, அங்கு பொன்னாகவே வாடிக்கையாளர்களுக்கு பரிமாறுகின்றனர் பார் ஊழியர்கள். 10 துண்டுகள் கொண்ட இந்த ”பொன்னான” கோழிக்கறியின் விலை, இந்திய மதிப்பில் மூவாயிரம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.-Source: polimernews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!