பிக்பாஸ் சீசன் 2 வில் ஆர்யாவின் காதலியா..? சர்ச்சையை ஏற்படுத்திய புகைப்படம்..!


பிரபல தனியார் தொலைக்காட்சியால் நடத்தப்பட்ட, எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட 16 பெண்களில் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் என்றால் அபர்ணதி தான். இவர் மனதில் பட்டதை உடனே வெளியில் பேசி விடுவதாலும், ஆர்யா மீது வைத்திருந்த காதலை உணர்வு பூர்வமாக வெளிப்படுத்தியதாலும் இவருக்கு ஆதரவு தெரிவிக்க ஒரு ரசிகர் கூட்டமே உருவானது.

இவரின் செயல்கள் மற்ற போட்டியாளர்களுக்கு கோபத்தை கொடுத்தாலும் ரசிகர்களுக்கு பிடித்திருந்தது.

‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சியில் இருந்து இவர் வெளியேறியதும் பிரபல தனியார் செய்தி தொலைக்காட்சியில் ஆர்யா மற்றும் ஒரு சில போட்டியாளர்களுடன் கலந்துக்கொண்டார், அப்போது பேசிய இவர், “நான் நிகழ்ச்சி இருந்து மட்டும் தான் வெளியில் வந்திருக்கிறேன், இன்னும் நான் ஆர்யாவை காதலித்துக் கொண்டு தான் இருக்கிறேன். என்னை இன்னும் நான் மாற்றிக்கொள்ளவில்லை என்று தெரிவித்தார்”.

ஆனால் நிகழ்ச்சியின் முடிவில் ஆபர்ணதிக்கு, மட்டும் அல்ல ஆர்யாவின் முடிவு அனைவருக்குமே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர் இறுதி சுற்றுக்கு தேர்வு செய்த மூன்று பெண்களையும் திருமணம் செய்துக்கொள்வதாக இல்லை என கூறி தப்பித்துக்கொண்டார்.

ஆர்யாவின் நினைவில் இருந்து தற்போது மெல்ல மெல்ல வெளியே வந்துக்கொண்டிருக்கும் அபர்ணதி, சில நகைக்கடை விளம்பரங்கள் மற்றும் நடிகர் ஜி.வி.பிரகாஷ்க்கு ஜோடியாக நடிக்க திரைப்படம் ஒன்றில் கமிட் ஆகியுள்ளார்.

இந்நிலையில் இவர், விரைவில் பிரபல தொலைக்காட்சியில் துவங்க உள்ள பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டது போல் ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது.

அந்த புகைப்படம் இதோ.-Source: tamil.asianetnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!