தலித் பெண்கள் 15 ஆண்டுகள் குறைவாகவே உயிர் வாழ்கிறார்களாம்.. அதிர்ச்சி ரிப்போர்ட்..!


இந்தியாவில் வசிக்கும் தலித் பெண்கள், மற்ற வகுப்பைச் சேர்ந்த பெண்களைக் காட்டிலும் சுகாதார ரீதியாக ஆரோக்கியம் இல்லாமல் இருப்பதாகவும், மற்றவர்களைக் காட்டிலும் 15 ஆண்டுகளுக்கு முன்பாகவே இறந்து விடுவதாகவும் தேசிய குடும்ப சுகாதார ஆய்வு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது..

தலித் பெண்கள் மரணமடையும் சராசரி வயது, முப்பத்து ஒன்பது ஆண்டுகளும் 5 மாதங்களும் என்றால், உயர் சாதியினர் என்று கூறப்படும் பெண்களின் சராசரி மரண வயது ஐம்பத்து நான்கு ஆண்டுகள் 1 மாதம்) என்று அந்த ஆய்வு கூறுகிறது.

தலித்துகளுக்கு எதிரான தீண்டாமை உள்ளிட்ட ஏனைய பாகுபாடுகள், அவற்றுக்கு எதிரான கிளர்ச்சிப் போராட்டங்கள் மூலம் ஏதோ ஒரு நேரத்தில் வெளி உலகிற்கு தெரிவந்து விடுகின்றன. ஆனால், இந்த சமூகத்தில் அவர்களுக்கு இழைக்கப்படும் சுகாதார அடிப்படையிலான பாகுபாடுகள் அவ்வளவாக வெளி வருவது இல்லை.


மொத்த மக்கள் தொகையில் 16.6 சதவிகிதமாக உள்ள தலித் மக்கள் பல்வேறு பாகுபாடுகளால் பாதிக்கப் பட்டு உள்ளனர். குறைவான கல்வி வாய்ப்புகள், உடல்நலத்தை பாதிக்கும் வகையிலான தொழில்களைச் செய்யவேண்டிய கட்டாயம், வேலைவாய்ப்பு,வீடுகள் மற்றும் இதர வளங்களை பயன்படுத்துவதை தடுப்பது மற்றும் அதில் காட்டப்படும் பாரபட்சம் ஆகியவற்றால் அவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இவை ஒட்டுமொத்தமாக தலித் மக்களுக்கும் பொதுவான பாதிப்பு என்றாலும், அவர்களில் குறிப்பாக தலித் பெண்கள், மிகவும் மோசமான சுகாதார அடிப்படையிலான பாதிப்பைச் சந்திப்பதாக தேசிய குடும்ப சுகாதார நிறுவனத்தின் ஆய்வு கூறுகிறது.

இந்தியாவில், 25 முதல் 49 வயதுடைய பெண்களிடையே இரத்தச் சோகை உள்ளவர்களில், 55.9 சதவிகிதம் பேர் தலித் பெண்களாக உள்ளனர்; இந்தியாவில் பெண்கள் எதிர் கொள்ளும் பரவலான பிரச்சனையாக இரத்தச் சோகை இருந்தாலும், தலித் பெண்கள்தான் இதில் மோசமாக பாதிக்கப்படுகின்றனர்.

உயர் சாதியினர் என்று கூறப்படும் பெண்களைக் காட்டிலும்தலித் பெண்கள் 14.6 ஆண்டுகளுக்கு முன்பாகவே இறப்பைச் சந்திக்கின்றனர் என்று ஆய்வு தெரிவிக்கிறது.-Source: tamil.asianetnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!