ஒரே வாரத்தில் முழங்கை, கழுத்து, அக்குளில் உள்ள கருமையைப் போக்க வேண்டுமா?


நம் உடலில் காணப்படும் காய்ந்த மற்றும் கருமையான சருமத்தினால் அழகும், பொலிவும் குறைவடைந்து விடும்.

கழுத்து, அக்குள், முழங்கால், முட்டிக்கை போன்ற பகுதிகளில் அதிகளவில் கருமை நிறமாக காணப்படும்.

இந்த கருமை நிறத்திற்கு, மெலரனின் அளவு அதிகம் சுரப்பதனாலும், தொடர்ச்சியாக முடி அகற்றுதல், இறுக்கமாக ஆடைகளை அணிவதனால் சருமத்தில் அடையாளங்கள் ஏற்படுதல், இறந்த மற்றும், ஒவ்வாமையை ஏற்படுத்திய கலங்கள் படிவதலுமே காரணமாகின்றன.

அத்துடன் மன அழுத்தம், கர்ப்பகாலம், விட்டமின் குறைபாடு, ஈரலின் போதிய செயற்பாடின்மை போன்றவற்றாலும் இந்த கருமை நிறம் தோன்றுகின்றன.

இயற்கையான முறையில் இலகுவாக கருமை நிறத்தை நீக்க முடியும்.
கருமையான அக்குள் பகுதிற்கு சிறந்த தீர்வு.

1. பால்.

பாலில் உள்ள விட்டமின் மற்றும் கொழுப்பமிலம் அக்குள் பகுதியில் உள்ள கருமை நிறத்தை நீக்க வல்லது.
தேவையானவை:

• ஒரு மேசைக்கரண்டி தயிர்.

• ஒரு மேசைக்கரண்டி பால்.

• இரண்டு மேசைக்கரண்டி மாவு.

செய்முறை

பால், தயிர், மாவை பசை போன்று கலந்து எடுக்கவும்.அதனை அக்குள் பகுதியில் தடவி உலர விட்ட பின்னர் நீரினால் கழுவினால் கருமை நிறம் குறைவடையும்.

2. வெள்ளரிக்காய்.

வெள்ளரிக்காய் சருமத்தை வெளிரச் செய்கின்றது. வெள்ளரிக்காய் சாற்றுடன், எலுமிச்சப்பழச் சாறு, மஞ்சள் சாறு சேர்த்து கலந்து கொள்ளவும்.

எலுமிச்சப்பழம், சருமத்தை வெண்மையாக்கும். மஞ்சள் அழுக்குகளை அகற்றக் கூடியது.இந்தக் கலவையை அக்குளில் பூசி வருவதனால் சிறிது நாட்களில் சிறந்த பலனைப் பெறுவீர்கள்.

3. கொண்டல் கடலை.

தேவையான பொருட்கள்

• ஒரு தேக்கரண்டி எலுமிச்சப்பழச் சாறு.

• ஒரு தேக்கரண்டி தயிர்.

• மஞ்சள் சிறிதளவு.

• 2 மேசைக்கரண்டி கொண்டல் கடலை மாவு.

செய்முறை

கொண்டல் கடலை மாவு, தயிர், மஞ்சள், எலுமிச்சப்பழச் சாறு சேர்த்து பசை போன்று அரைத்துக் கொள்ளவும்.

கலவையை அக்குளில் தடவி 20 நிமிடங்களின் பின்பு கழுவினால் கருமை நிறம் நீங்கும்.
முழங்கை, முட்டிக் கால், கழுத்து பகுதியின் கருமையை நீக்கும் வழி.

1) சர்க்கரை.

சர்க்கரை சருமத்தில் இறந்த கலங்களை நீக்கி மிருதுவாக்க உதவுகின்றது. சர்க்கரையுடன் சம அளவு ஒலிவ் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும்.

இந்த கலவையை முழங்கால், முழங்கை, கழுத்துப் பகுதியில் தடவி 10 நிமிடங்களின் பின்பு கழுவுவதனால் கருமை நிறம் நீங்கும்.

2) எலுமிச்சப்பழச் சாறு.

எலுமிச்சப்பழத்தில் உள்ள விட்டமின் சி சருமத்தை வெளிறச் செய்கின்றது. அத்துடன் புடிய கலங்கள் உருவாவதற்கும் தூண்டுகின்றது.

எலுமிச்சப் பழச்சாற்றை கருமையான இடங்களில் தடவி 10 நிமிடங்களிற்கு பின்பு கழுவி வருவதனால் சிறந்த பலனைப் பெறுவீர்கள்.- © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!