டிசம்பர் மாத இறுதிக்குள் தமிழகத்திற்கு பேராபத்து… வெளியானது பஞ்சாங்க கணிப்பு..!


தூத்துக்குடி கோரப்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீபிரத்தியங்கிராதேவி காலபைரவர் சித்தர் பீடத்தின் சுவாமிகள் சற்குரு சீனிவாசசித்தர்.

இவர் தமிழகத்தின் நிலையை பற்றி முன்கூட்டியே கணித்து பேசி உள்ளார்.

பஞ்சாங்கம் என்ன சொல்கிறது..?

பஞ்சாங்கம் அடிப்படையில் பார்க்கும் போது, “தற்போது நிலவி வரும் கிரக சூழ்நிலைகள் மற்றும் தோஷங்களின் அடிப்படையில் தமிழகத்தில் சில விரும்பத்தகாத நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது”

மேலும் இந்த ஆண்டு இறுதிக்கும் இதை விட பெரிய அளவில் பேரழிவிற்கான இயற்கை சீற்றங்கள் நடைபெறும் என்பதை சித்தர்கள் முன்கூட்டியே அறிந்து உள்ளனர்.

திருச்செந்தூர்…!

திருச்செந்தூர்…! முருகன் கோவிலின் மேற்கூரை திடீரென்று உடைந்து விழுந்தது. மேலும் மதுரை கோவிலில் தீ விபத்து ஏற்பட்டு விட்டது

ஸ்ரீரங்கம் கோவில் வசந்த மண்டபத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

ஜெயலலிதா வழங்கிய யானை

சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் வழங்கப்பட்ட யானை மசினி தன்னை வளர்த்து பராமரித்த பாகனையே திடீரென்று கோவில் வளாகத்தில் தாக்கி கொன்றது.

குரங்கனி காட்டு தீ

குரங்கனி காட்டுத் தீயில் சிக்கி 20 கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர்.


தூத்துக்குடி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் 13 பேர் உயிர் இழந்துள்ளனர்

தண்ணீர் /தீ /நோய்

இதற்கு முன் நடந்த அழிவுகளை விட இந்த ஆண்டு தமிழகத்தில் அதிக அழிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும்….அதன்படி தான்….தற்போது நிபா வைரஸ் கூட கேரளாவில் தோன்றி உள்ளது…

தமிழகத்தில் பொறுத்தவரை அதிக அளவிலான மழை பெய்து இயற்கை சீற்றம் ஏற்படவும்…அதே சமயத்தில் தீயால் சில பாதிப்புகளையும் இந்த ஆண்டு இறுதிக்குள் நடக்க வாய்ப்பு உள்ளது என தெரிவித்து உள்ளார்.

ஆட்சி மாற்றம்…

இது போன்று தொடர் பிரச்சனை ஏற்பட்டு வருவதால் அரசு சமாளிக்க முடியாமல் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதை அனைவராலும் புரிந்துக்கொள்ள முடியும்.

அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க….

ஒவ்வொருவரும் தங்கள் பகுதியிலுள்ள கோவில்களுக்கு சென்று அங்கு எழுந்தருளியிருக்கும் அம்பாளை மனம் குளிர ஐந்துமுக நெய் விளக்கேற்றி வழிபடுவது நல்லபலன் தரும் (நம்பிக்கை உள்ளவர்கள் )

இயற்கை அன்னையை வணங்கி, தினமும் வழிபட்டு வருவதன் காரணமாக இந்த ஆண்டு இறுதிக்குள் நடக்க இருக்கும் இயற்கை சீரழிவுகளில் இருந்து தமிழகத்தை காப்பாற்றிக்கொள்ள முடியும். மேலும் கிரக நிலையினால், ஏற்பட உள்ள பெராபதுக்களை கட்டுக்குள் கொண்டு வர முடியும் எனவும் அவர் கூறி உள்ளார்.-Source: tamil.asianetnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!