காலா-வின் கதை இதுதான் – அமெரிக்க திரையரங்கம் வெளியிட்ட கதைச்சுருக்கம்..!


நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள “காலா” திரைப்படம் வரும் 7-ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், படத்தின் இறுதி கட்ட வியாபாரம் மற்றும் விளம்பர பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகின்றன.

ஆனால், ரஜினியின் சமீப கால நடவடிக்கைகள் நெகட்டிவ் விமர்சங்களை பெற்றதால் வசூல் பாதிக்குமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், இந்த படத்தை அமெரிக்காவில் வெளியிடவுள்ள சினிமார்க் என்ற திரையரங்கம் காலா படத்தின் கதைசுருக்கத்தை தனது இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.

அதன் படி, திருநெல்வேலியில் இருந்து சிறுவயதில் மும்பைக்கு செல்லும் காலா, அங்குள்ள தாராவி என்ற ஸ்லம் பகுதியில் டானாக மாறி அப்பகுதி மக்களுக்காக கேங்ஸ்டராக மாறி போராடுவதே காலா பட கதை என்று பதிவு செய்துள்ளனர்.

காலா படத்தின் கதைச்சுருக்கம் இணையத்தில் லீக் ஆனது படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!