அமெரிக்க ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிய வடகொரிய ஜனாதிபதி..!!


அமெரிக்கா ஜனாதிபதிக்கு வடகொரிய ஜனாதிபதி கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளதை தொடர்ந்து இருவருக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

இதேவேளை வடகொரியாவை அணுவாயுதங்களை கைவிடச்செய்வதற்கான முயற்சி உடனடியாக வெற்றியளிக்காது என தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அதற்கு சிறிது காலம் தேவை என தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் யூன் 12 ம் திகதி வடகொரியா ஜனாதிபதியை சந்திப்பதற்கு இன்னமும் ஆர்வத்துடன் உள்ளேன் எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வடகொரியா அணுவாயுதங்களை கைவிடச்செய்வதற்கான முயற்சிகள் ஓரே சந்திப்பில் வெற்றிபெறவேண்டும் என்பதுதான் எனது விருப்பம் எனினும் அதற்கான சாத்தியங்கள் குறைவு இதன் காரணமாக ஆனாலும் ஏதோ ஒரு தருணத்தில் நான் அதனை நிறைவேற்றிக்காட்டுவேன் எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதேவேளை உச்சி மாநாட்டிற்கான பேச்சுவார்த்தைகளிற்கான அமெரிக்க சென்றுள்ள வடகொரிய பிரதிநிதிகள் இன்று வெள்ளை மாளிகைக்கு விஜயம் செய்யவுள்ளதுடன் வடகொரியா ஜனாதிபதியின் கடிதமொன்றை டிரம்பிடம் கையளிக்கவுள்ளனர்.

உச்சி மாநாடு நடைபெறலாம் என்பதற்கான அறிகுறியாக இந்த கடிதத்தை கருதலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.source-virakesari

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!