ஒரே குடும்பத்தின் 3 சகோதரர்களை திருமணம் செய்த இளம் பெண்ணுக்கு இப்படி ஒரு நிலமையா..?


ஆப்கானிஸ்தானை சேர்ந்த இளம் பெண் தங்கள் கலாச்சார வழக்கப்படி உயிரிழந்த கணவரின் சகோதரரை திருமணம் செய்த நிலையில் தாலிபான் தீவிரவாதிகளிடம் இரண்டு கணவர்களை இழந்துள்ளார். கதீஜா (18) என்ற இளம் பெண்ணுக்கு ஆறு வயது இருக்கும் போதும் அவர் குடும்பத்தார் அவரை விட 15 வயது மூத்தவரான ஹக் என்பதை திருமணம் செய்து வைத்தனர்.ஊரில் மரவேலை செய்து வந்த ஹக் அங்குள்ள தாலிபான் தீவிரவாதிகளால் மூளை சலவை செய்யப்பட்டார்.இதையடுத்து அந்த இயக்கத்தில் உளவாளியாக சேர்ந்தார். இந்நிலையில் கடந்த 2010-ல் நடந்த தாக்குதலில் ஹக் உயிரிழந்தார்.

இதையடுத்து விதவையான கதீஜா மறுமணம் செய்ய வேண்டும் என குடும்பத்தார் வலியுறுத்தினார்கள்.அவர்கள் ஊர் வழக்கப்படி பெண்ணின் கணவர் இறந்தால், கணவரின் சகோதரரை அப்பெண் மறுமணம் செய்ய வேண்டும். அதன்படி போலீஸ் பணியில் இருந்த ஹக்கின் சகோதரரான அமினுல்லாவை கதீஜா திருமணம் செய்தார். இதையடுத்து கர்ப்பமான கதீஜா பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.கடந்த 2014-ல் தாலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் போலீசான அமினுல்லா கொலை செய்யப்பட்டார். இதனால் கை குழந்தையுடன் இடிந்து போய் இருந்த கதீஜாவுக்கு அமினுல்லாவின் சகோதரர் சம்சுதின் கடந்த 2015-ல் வாழ்க்கை கொடுத்தார்.

சம்சுதின் ரிக்‌ஷா ஓட்டி பிழைப்பை நடத்தி வருபவர் ஆவார், குறைந்த வருமானம் வந்தாலும் தனது மனைவி கதீஜாவை அவர் நன்றாக பார்த்து கொள்கிறார். விரைவில் போலீஸ் வேலையில் சேரும் எண்ணமும் அவருக்கு உள்ளது, ஆனால் தனது சகோதரர்கள் உயிர் இழந்தது போல தனக்கும் எதாவது ஆகிவிட்டால் குடும்பம் என்னாவது என்ற கவலை மட்டும் அவருக்கு உள்ளது. கதீஜா கூறுகையில், சிறுவயதிலிருந்து நிறைய துன்பங்களை அனுபவித்து விட்டேன், என் கணவர் சம்சுதினும் தாலிபான் தீவிரவாதிகளால் கொல்லப்படக்கூடாது என்பதே என் எண்ணம் என கூறியுள்ளார்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!