#BREAKING_NEWS தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசின் அடுத்த அதிரடி…!


தூத்துக்குடி மக்களின் போராட்டத்தின் வெற்றியாக ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்பட்ட நிலையில், அந்த ஆலையின் விரிவாக்கத்துக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 342 ஏக்கர் நிலம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

துப்பாக்கிச் சூடு சம்பவத்தை அடுத்து சில நாட்களாக பதற்றம் நீடித்தநிலையில், தற்போது இயல்பு நிலை திரும்பத் தொடங்கி உள்ளது.அங்கு விதிக்கப்பட்டிருந்த 144 தடைச் சட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

தற்போது அங்கு கடைகள் திறக்கப்பட்டுள்ளன, பேருந்துகள், ஆட்டோக்கள் வழக்கம் போல் ஓடத் தொடங்கியுள்ளன.

இந்த நிலையில், பொதுமக்களின் உணர்வுகளுக்கும், கருத்துகளுக்கும் மதிப்பு அளிக்கும் வகையில், ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது. இது தொடர்பான அரசாணையும் வெளியிடப்பட்டது. இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலை நேற்று சீல் வைக்கப்பட்டது.

இந்நிலையில் தமிக அரசு தற்போது அடுத்த அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அதன்படி ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கத்துக்காக சிப்காட் நிறுவனம் கடந்த 2005, 2006, 2009 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் 342.22 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்தது.

தற்போது அந்த நிலம் ஒதுக்கீடு செய்த ஆணையை ரத்து செய்து சிப்காட் மேலாண்மை இயக்குநர் உத்தவிட்டுள்ளார். அந்த நிலத்துக்காக ஸ்டெர்லைட் ஆலையிடம் இருந்து பெறப்பட்ட பணம் திரும்ப வழங்கப்படும் எனவும் சிப்காட் அறிவித்துள்ளது.-Source: tamil.asianetnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!