இந்த கேள்வியையா கோவா முதல்வரிடம் மாணவர்கள் கேட்டார்கள்? என்ன கேள்வி தெரியுமா?


கோவாவில் நடைபெற்ற குழந்தைகள் தின நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அம்மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர், மாணவர்களோடு கலந்துரையாடினார்.

அப்போது மாணவர்கள், “நீங்கள் சிறுவயதில் எந்த மாதிரியான படங்கள் பார்ப்பீர்கள்?” என்று கேட்டபோது, “நாங்கள் வெறும் படங்கள் மட்டும் பார்க்கவில்லை; அந்த காலகட்டத்தில் வந்த அடல்ட் படங்களையும் பார்த்தோம்” என்று வெளிப்படையாக பதிலளித்தார்.

மேலும், அந்தக்கால அடலட் படங்களில் நாங்கள் பார்த்ததை விட அதிகமாகவே நீங்கள் இப்போது டிவியில் பார்க்கிறீர்கள் என்றும் கூறினார். மேலும் பேசிய அவர், “ஒரு பிரபல அடல்ட் படத்திற்கு நானும் என் சகோதரரும் சென்றிருந்தோம்.

படத்தின் இடைவேளையின்போது, விளக்குகளை போட்டபிறகு பார்த்தால் என் பக்கத்துவீட்டுக்காரர் அமர்ந்திருந்தார். அந்த நபர் என் அம்மாவிடம் தினமும் மாலை வேளையில் பேசிக்கொண்டிருப்பார்.

நானும் எனது சகோதரர் அவ்தூத்தும் உடனடியாக திரையரங்கை விட்டு வெளியே ஓடி வந்துவிட்டோம். வீட்டுக்கு செல்லும் வழியில் அம்மாவிடம் என்ன சொல்லலாம் என யோசித்துவிட்டோம். வீட்டுக்கு சென்றவுடன் அம்மாவிடம், நாங்கள் ஒரு படத்துக்கு சென்றோம்.

அந்தப்படம் மிகவும் ஆபாசமாக இருந்தது. அதனால் நாங்கள் பாதியிலேயே எழுந்து வந்துவிட்டோம் என்று கூறிவிட்டோம். அடுத்தநாள் நாங்கள் எதிர்பார்த்தது போலவே அந்த நபர், எங்களை ‘அடல்ட் படம்’ ஓடும் திரையரங்கில் பார்த்ததாக அம்மாவிடம் கூறினார்.

அப்போது எங்கள் அம்மா, அவர்கள் எந்தப்படத்திற்கு சென்றார்கள் என்று எனக்கு தெரியும். நீங்கள் ஏன் அந்தப்படத்திற்கு சென்றீர்கள் என்று கேட்டார்” என்று கூறினார்.

எனவே, சில பிரச்னைகளை சமாளிக்க முன்கூட்டியே முறையாக திட்டமிட வேண்டும் என்று மாணவர்களிடம் பாரிக்கர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!