கார் விபத்தில் சிக்கி கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ. மரணம்..!


கர்நாடக மாநிலம் ஜாம்கண்டி தொகுயில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் சித்து பீமப்ப நியாம்கவுடு. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர் கோவாவில இருந்து கர்நாடகாவின் பாகல்கோட் நகருக்கு காரில் வந்துகொண்டிருந்தார். துளசிகேரி அருகே வந்தபோது அவரது கார் விபத்தில் சிக்கியது. இதில் எம்.எல்.ஏ. சித்து உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சமீபத்தில் நடந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஜாம்கண்டி தொகுதியில் போட்டியிட்ட சித்து பீமப்ப நியாம்கவுடு, பா.ஜ.க. வேட்பாளர் குர்கர்னி ஸ்ரீகாந்த் சுப்புராவை விட 2795 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். காங்கிரஸ் கட்சி மொத்தம் 78 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தற்போது சித்து மறைந்தையடுத்து, சட்டமன்றத்தில் காங்கிரசின் பலம் 77 ஆக குறைந்துள்ளது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!