விஜய் பெயர் வைத்திருப்பவர்கள் எல்லோரும் இப்படித்தான்… ராதிகாவா இப்படி சொன்னார்…!


ஜி.ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாக இருக்கும் ‘அண்ணா துரை’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ராதிகா விஜய் பெயர் கொண்டவர்கள் எல்லாருமே பூனை போன்றவர்களாகவே இருக்கிறார்கள் என்றார். ஆர் ஸ்டுடியோஸ், விஜய் ஆண்டனி பிலிம் கார்பரே‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் ‘அண்ணா துரை’.

ஜி.ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி – டயனா சாம்பிகா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் இவர்களுடன் மகிமா, ஜூவல் மேரி, ராதா ரவி, காளி வெங்கட், நளினிகாந்த், ரிந்து ரவி உள்பட பலர் நடித்துள்ளனர்.

விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. அதில் படத்தின் தயாரிப்பாளரும் நடிகையுமான ராதிகா சரத்குமார் பேசும் போது,


விஜய் ஆண்டனியை சில வருடங்களுக்கு முன்பே தெரியும் என்றாலும் அவர் இருக்கும் இடமே தெரியாது. ஒரு பூனை போல பதுங்கியே இருப்பார். நடிகர் விஜய்யும் அமைதியானவர் என்றாலும் திரையில் தான் யார் என்பதை வெளிப்படுத்துவார்.

அதேபோல் தான் விஜய் ஆண்டனியும். பல திறமைகளை கொண்டவராக இருந்தும், அமைதியாக பூனை போலவே இருந்தாலும் திரையில் தனது ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துவார். அவரை திரையில் பார்க்க ஆவலாக இருக்கிறேன்.

இவ்வாறு கூறினார்.

பாடல் வெளியீட்டின் போதே பாடல்கள் அனைத்தும் விஜய் ஆண்டனியின் இணையதளத்திலும் வெளியிடப்பட்டது. ரசிகர்கள் www.vijayantony.com என்ற இணையதளத்திற்கு சென்று பாடல்களை இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!