சித்தூரில் நடந்த அதிர்ச்சி – 12 வயது சிறுமியை 3 மாதங்களாக மிரட்டிய கற்பழித்து வந்த 5 சிறுவர்கள்..!


கடந்த 3 மாதங்களாக சிறுமியை 5 சிறுவர்கள் பலவந்தமாக கற்பழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் அடுத்த புங்கனுர் பகத்சிங் நகரை சேர்ந்தவர் 12 வயது சிறுமி. அதே பகுதியை சேர்ந்த சிறுவன் ஒருவன் அந்த சிறுமிக்கு சாக்லெட் கொடுத்து அவர்களின் வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

பின்னர் இது குறித்து தனது நண்பர்களிடத்தில் கூறி அவர்களையும் அழைத்து சென்று சிறுமியை பலாத்காரம் செய்துள்ளனர். கடந்த 3 மாதங்களாக அந்த சிறுமியை 5 சிறுவர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவோம் என சிறுவர் கும்பல் மிரட்டியதால் பாதிக்கப்பட்ட சிறுமி, தனக்கு நேர்ந்த கொடுமையை யாரிடமும் சொல்லாமல் மறைத்து வந்திருக்கிறாள். அந்த சிறுமிக்கு நேர்ந்த கொடுமை குறித்து சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வந்ததையடுத்து, சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் 5 பேரையும் தேடி சென்றனர். புங்கலூர் பஸ் நிலையம் அருகே இருந்த 2 சிறுவர்களை பிடித்து அடித்து உதைத்தனர்.

சுமார் மூன்று மாதங்கள் கழித்து இந்தக் கொடுமை தெரிய வந்ததும் பதறிப் போன சிறுமியின் தாயார், காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, சிறுமியை தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி துன்புறுத்தி வந்த கும்பலை போலீசார் கைது செய்தனர். ஆத்திரமடைந்த பொதுமக்களும், சிறுமியின் உறவினர்களும் அந்த சிறுவர்களை அடித்து உதைக்க முற்பட்டனர்.

டி.எஸ்.பி. சவுடேஸ்வரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 2 சிறுவர்களையும் மீட்டு போலீஸ் நிலையம் அழைத்து சென்று அவர்களிடம் விசாரணை நடத்தினர். மூன்று மாதங்களாக சிறுமியை மிரட்டி மிரட்டியே கற்பழித்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Source: tamil.asianetnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!