தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்த ஸ்டண்ட் சில்வாவின் உறவினர்..!


ஸ்டெர்லைட் போராட்டம் தூத்துக்குடி மாவட்டத்தையே போராட்டக் களமாக மாற்றியிருக்கும் நிலையில், இந்த போராட்டத்தில் தனது உறவினரும் உயிரிழந்துள்ளதாக ஸ்டண்ட் சில்வா வருத்தம் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தூத்துக்குடி மக்கள் கடந்த 100 நாட்களாக தொடர்ந்து போராடி வருகின்றனர். போராட்டத்தின் 100-வது நாளான நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் மாவட்ட ஆட்சிர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர். அப்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்களில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் தூத்துக்குடியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

இதில் ரஞ்சித்குமார், கிளாஸ்டன், கந்தையா, தமிழரசன், சண்முகம், மாணவி வெனிஸ்டா, அந்தோணி செல்வராஜ், மணிராஜ், கார்த்திக் உள்ளிட்ட 11 பேர் பலியாகினர். மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த போராட்டத்தில் தனது உறவினரும் உயிரிழந்துள்ளதாக ஸ்டண்ட் சில்வா அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஸ்டண்ட் சில்வா கூறியிருப்பதாவது,

`எனது அன்புத்தங்கையின் கணவர் ஆருயிர் மாப்பிள்ளை J. செல்வராஜ் ஸ்டெர்லைட் போராட்டத்தில் அநியாயமாக போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டார். மிக்க வேதனையோடு பகிர்கிறேன்’ என்று கூறியிருக்கிறார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!