நிஃபா வைரஸ் காய்ச்சலின் அறிகுறிகள் என்ன..? தடுப்பது எப்படி..? எச்சரிக்கை தகவல்..!


கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் பெரம்பிரா கிராமத்தில் நிஃபா வைரஸ் காய்ச்சலுக்கு 10 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 50 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு அடைந்துள்ளதாகவும் தெரிகிறது.

இன்று கேரள மக்கள் மட்டுமல்லாமல் தமிழக மக்களையும் அலற வைக்கும் விஷயம் நிஃபா வைரஸ் காய்ச்சல். வவ்வால்கள் கடித்து போட்டுச் சென்ற பழங்கள், திறந்த வெளி கிணற்றுத் தண்ணீர் போன்றவையே நிஃபா வைர காய்ச்சலுக்கு காரணம் என்றும், இந்த காய்ச்சல் எங்கு உருவானது ? எப்படி கண்டறிவது ? நோயை எப்படி தடுப்பது? நிஃபா வைரஸ் காய்ச்சலில் இருந்து எப்படி தப்புவது? போன்றவை குறித்து பார்க்கலாம்..

மலேசியாவில் உருவான நிஃபா

1997இல் எல்நினோ புயலுக்கு பிறகு மலேசியாவில் அதிக அளவில் பன்றிகள் உயிரிழந்தன. ஏராளமான பன்றிக்கூடங்கள் அழிந்தன.அந்த நோய் மனிதர்களையும் தாக்கத் தொடங்கியது. 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.

இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழக்கவும் நேரிட்டது. இது ஒரு புதிய வகை நோய் என்பதால் பல்வேறு சந்கேங்கள் எழுந்தன. ஆரம்பத்தில் ஜப்பான் காய்ச்சலுக்கு காரணமான கியூலக்ஸ் கொசுக்கள் மூலமாக பரவுவதாக கூறப்பட்டதால் கொசு ஒழிப்பில் தீவிர கவனம் செலுத்தினர். அதற்குள் புயல் காற்று போல் நோய் பரவியது. இறுதியில் ஒருநோயாளியின் மூளையிலிருந்து எடுக்கப்பட்ட நீரை சோதனை செய்தபோது இந்த நோய்க்கு காரணமான மலேசியாவில் உருவான நிஃபா வைரசை முதன் முதலாக உலகம் அறிந்தது.

ஹெனிபா வைரசின் ஒரு புதிய வடிவம்தான் நிஃபா என்பது தெரியவந்தது. மலேசியாவில் உள்ள காம்பங் பாரு சுங்காய் நிபா என்கிற இடத்தில் இந்த நோய் கிருமி கண்டறியப்பட்டதால் அதே பெயரை இந்த வைரசுக்கு மருத்துவ விஞ்ஞானிகள் சூட்டினர்.

நிஃபா வைரஸ்பாராமிக்ஸோவைரிடே குடும்பத்தைச் சேர்ந்த ஆர்என்ஏ வைரசாகும். இந்த வைரஸ் தாக்குதலை தடுக்கும் மருந்துகள் அப்போது மலேசியாவிலும், உலகின்பிற பகுதிகளிலும் இல்லை.

இந்த வைரசின் பிறப்பிடமான பன்றிகளை கொன்று விடுவது மட்டுமே அப்போது இருந்த ஒரேவழி. மலேசியாவில் 6 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பன்றிவர்த்தகம் வீழ்ச்சி அடைய நிஃபா வைரஸ் காரண மாக அமைந்தது.

இதையடுத்து உலகின் பிற பகுதிகளிலும் நிஃபா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. மிகவும்அதிக பாதிப்பை அவ்வப்போது ஏற்படுத்தியது வங்காள தேசத்தில். 2001 முதல் அங்கு சுமார்150 மரணங்கள் இந்த வைரசால் ஏற்பட்டுள் ளன. வவ்வால்கள், பன்றிகள் மூலமாக மட்டுமல்லாமல் இந்த நோய் தாக்குதலுக்குள்ளான மனிதர்களிடமிருந்தும் மற்றொருவருக்கு எளிதில் நிஃபா வைரஸ் பரவும்.


நிஃபா வைரஸ் அறிகுறிகள்

காய்ச்சல், தலைவலி, வாந்தி, தலைச்சுற்றல்,மயக்கம், சிலருக்கு வலிப்பு ஏற்படலாம், 10 முதல் 12 நாட்கள் இந்த அறிகுறிகள் தொடர்ச்சியாக காணப்படும். அதன் பிறகு சுயநினைவு அற்றநிலையில் மரணம் ஏற்படும்.

தடுப்பதற்கான வழிமுறைகள்

பறவைகள் கடித்த பழங்களை சாப்பிடக் கூடாது. நிஃபா வைரஸ் பாதிக்கப்பட்டவருடன் தொடர்புள்ளவர்கள் கைகளை நன்றாக கழுவ வேண்டும். நோயாளியை சந்திக்கும்போது முகமூடி, கையுறைகள் அணிய வேண்டும். வவ்வால்கள் அதிகம் உள்ள பகுதிகளிலிருந்து எடுக்கப்படும் பனை, தென்னை பானங்கள் அருந்தக்கூடாது.

இந்நிலையில் வவ்வால் கடித்து அழுகிய பழங்கள் விழுந்த கிணற்றுத் தண்ணீர் மூலமாகவும் நிபா வைரஸ்பரவ வாய்ப்புள்ளதாகவும், எந்த நிலையிலும் மக்களை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கையை அரசுமேற்கொண்டுள்ளதாகவும் கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

கோழிக்கோட்டில் அடுத்தடுத்து 2 மரணங்கள்ஏற்பட்டதும் நோய் குறித்து சந்தேகம் எழுந்தது. இறந்தவர்களின் உடம்பிலிருந்து மாதிரிகள் மணிப்பால் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. நிஃபா வைரஸ் குறித்து தேசிய வைராலஜி நிறுவனத்தின் ஆய்வுக்குப் பிறகு மட்டுமே கூற முடியும். இரண்டாவது மரணம் ஏற்பட்ட உடனே மத்திய அரசுடனும், என்சிடிசி மற்றும் மத்திய சுகாதாரத்துறையுடன் தொடர்பு கொண்டோம். மத்திய சுகாதாரக்குழுவை உடனடியாக அனுப்புமாறு கோரிக்கை விடுத்திருந்தோம் என்று தெரிவித்தார்.

பினராயி விஜயன் நடவடிக்கை

இந்நிலையில் மாநில அரசின் வேண்டுகோளை ஏற்று தற்போது மத்திய சுகாதாரக்குழு கோழிக்கோடு வந்துள்ளது. அவர்களுடன் கலந்து ஆலோசித்து நிபாவைரஸ் தடுப்புக்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் கேரள அரசு மேற்கொள் ளும் என்று முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

காய்ச்சலுடன் வரும் அனைவருக்கும் சிகிச்சை அளிப்பதை தனியார் மருத்துவ மனைகள் தவிர்க்கக் கூடாது என அவர் உத்தரவிட்டுள்ளார். கோழிக்கோடு மட்டுமே தற்போது வைரசால் பாதிக்கப்பட்டுள்ள போதிலும் மாநிலம் முழுவதும் முன் எச்சரிக்கைநடவடிக்கை மேற்கொள்ள சுகாதாரத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக பினராயி தெரிவித்தார்.

கோழிக்கோடு மாவட்டத்தில் தேவையான இடங்களில் தனிமைப் பிரிவுகளுடன் 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறைகளும் அங்கு திறக்கப்பட்டுள்ளன. சுகாதாரத் துறை அமைச்சர் தலைமையில் நிலைமைகள் குறித்து அவ்வப்போது அறிந்து அதற்கேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சுகாதாரத்துறை அறிவிக்கும் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை ஏற்று இப்போதுஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காண அனைவரும் ஒன்றுபட வேண்டும் என முதலமைச்சர் பினராயி விஜயன் கேட்டுக்கொண்டுள்ளார்.-Source: tamil.asianetnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!