கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகிய 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள்..!!


கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகிய, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவை நாளை மறுநாள் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளனர்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து கொண்டுள்ள, இவர்கள், பொது திட்டத்தின் அடிப்படையில் இணைந்து செயற்படுவது குறித்து மகிந்த ராஜபக்சவுடன் பேச்சு நடத்தவுள்ளனர் என்று அந்த அணியைச் சேர்ந்தவரான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்தை விட்டு விலகுவார்கள் என்றும், அவர் கூறியுள்ளார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆலோசகராகவும், சிறிலங்கா பொதுஜன முன்னணியின் நிழல் தலைவராகவும் இருக்கும் மகிந்த ராஜபக்சவுடன், இரண்டு கட்சிகளும் இணைந்து பணியாற்றுவது குறித்து பேசவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், கூட்டு எதிரணியில் உள்ள தினேஸ் குணவர்த்தன, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றவர்களையும் தாம் சந்தித்துப் பேசவிருப்பதாகவும், தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.source-puthinappalakai

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!