இது தான் எங்கள் சிம்பு… நெகிழ்ச்சியில் ரசிகர்கள்! – வைரலான வீடியோ..!


சர்ச்சைகளை கண்டு பயப்படாமல் அவற்றையே தனது வெற்றியாக மாற்றி , கோலிவுட்டில் வலம்வந்து கொண்டிருந்த நடிகர் சிம்பு. ஆனால் சமீப காலமாக தன்னை குறித்து வந்த செய்திகளால் மனம் நொந்து போய் இருக்கிறார் சிம்பு. மேலும் இந்த செய்திகள் அவரின் திரையுலக வாழ்விலும் சற்று தாக்கத்தை ஏற்படுத்தவே, கொஞ்சம் கலங்கித்தான் போயிருக்கிறார் அவர்.

இதுவரை வெளிவந்த படங்கள் எதுவும் பெரிய அளவில் அவருக்கு கைகொடுக்காத நிலையில், இனி சிம்பு அவ்வளவு தான் ஒரு சிலர் கூறிவருகின்றனர். ஆனால் அவர் ஃபீனிக்ஸ் மாதிரி மீண்டும் எழுந்து வருவார். என சவால் விட்டு வருகின்றனர் அவரின் ரசிகர்கள் .


எந்த சூழ்நிலையிலும் சிம்புவை விட்டு நீங்காமல், அவருக்கு உறுதுணையாக இருப்பதில் சிம்பு ரசிகர்கள் நிஜமாகவே கிரேட் . அப்படிப்பட்ட ரசிகர்களுடனான சிம்புவின் உறவு அதை விட கிரேட். இதை நிரூபிக்கும் வகையில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் சமீபத்தில் நடைபெற்றது. சிம்பு இறந்து போன தனது ரசிகர் ஒருவரின் இரங்கல் போஸ்டரை தானே ஒட்டிக்கொண்டிருப்பது போன்ற ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகியிருக்கிறது. இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை பார்த்து இது தான் எங்க சிம்பு என அவரது ரசிகர்கள் நெகிழ்ந்திருக்கின்றனர்.-Source: tamil.asianetnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!