விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனையும், வீரப்பனையும் பெருமைபடுத்திய எடப்பாடியார்..!


முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மூன்று நாள் அரசு முறை பயணமாக கோயம்புத்தூர், ஊட்டி, கொடைக்கானல் ஆகிய பகுதிகளுக்கு செல்லவிருக்கிறார். இந்த பயணத்தின் முதல் நாளான இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோயம்புத்தூரில் தமிழ்நாடு காவல் அருங்காட்சியகத்தை திறந்து வைத்து தமிழ்நாடு காவல் அருங்காட்சியகத்தின் விவரங்கள் அடங்கிய கையேட்டினை வெளியிட்டார்.

இந்தக் கண்காட்சியகத்தில் காவல்துறையில் பயன்படுத்தபடும் ஆயுதங்கள், காவல்துறையின் சீருடைகள் எனப் பலவும் காட்சிக்குவைக்கப்பட்டுள்ளது.

இதில் வீரப்பன் பயன்படுத்திய ஆயுதங்கள், விடுதலை புலிகள் பயன்படுத்திய ஆயுதங்கள், ராணுவத் தளவாடங்கள் உட்பட காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.இக்கண்காட்சியகம் மக்கள் பார்வைக்கு உண்டு என தெரிவித்துள்ளனர்.

அருங்காட்சியகத்தை திறந்து வைத்தபின் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோவையில் இரவில் வந்து நிற்கும் விமானங்களுக்கு எரிபொருளில் வரிச்சலுகை உண்டு என அறிவித்துள்ளார். இதனால் பல்வேறு நாடுகளுக்குமான நேரடி விமான சேவை கோயம்புத்தூரில் தொடங்கும் எனக் கூறினார்.-Source: tamil.asianetnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!