15 மில்லியனிற்கு மேல் செக் மோசடி செய்த பெண்மணி தலைமறைவு..!


15 மில்லியனிற்கு மேல் மோசடி செய்த பெண்மணியொருவரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள பொலிஸார் அவர் குறித்த விபரங்களை கோரியுள்ளனர்.
சித்தார கீத்தானி என்ற பெண்மணி தொடர்பிலேயே பொலிஸார் விபரங்களை கோரியுள்ளனர்.

போலி காசோலைகளை வழங்கி பலரை ஏமாற்றிய பெண்மணியொருவர் தலைமறைவாகயுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மவுன்ட்லவேனியாவில் வர்த்தக நிலையமொன்றை நடத்தி வந்த குறிப்பிட்ட பெண் போலிகாசோலைகளை வழங்கி பல கடைகளில் ஆடைகளை கொள்வனவு செய்துள்ளார்.
மவுன்ட்லவேனியா பொலிஸில் இந்த பெண்மணிக்கு எதிராக 24 பேர் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனை தொடர்ந்து குறிப்பிட்ட பெண்மணியை கைதுசெய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்;டுள்ளது.

இந்நிலையில் குறிப்பிட்ட பெண்மணியின் படத்தை வெளியிட்டுள்ள பொலிஸார் அவர் குறித்த விபரங்களை கோரியுள்ளனர்.-Source: metronews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!