கர்நாடகத்தில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கின்றது பாஜக..!


கர்நாடகாவில் பாஜக 112க்கும் மேற்பட்ட எம்.எல்.எக்களுடன் ஆட்சி அமைக்க இருக்கின்றது.

கர்நாடகத்தில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 2 இடங்கள் தவிர 222 தொகுதிகளுக்கு கடந்த 12-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ், பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்)-பகுஜன் சமாஜ் கூட்டணி ஆகிய 3 கட்சிகள் இடையே தான் போட்டி நிலவும் என்ற எதிர்பார்ப்புக்கள் நிலவி வந்தது.

இந்த தேர்தலில் 72.36 சதவீத ஓட்டுகள் பதிவாயின. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மாநிலம் முழுவதும் 38 மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. அந்த மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. இதில், காங்கிரஸ் முன்னிலை வகித்தது. சிறிது நேரத்தில், ஆளும் காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா இடையே கடும் இழுபறி ஏற்பட்டது. முன்னணி நிலவரம் நிமிடத்துக்கு, நிமிடம் மாறிக்கொண்டே உள்ளது.

இதனால், எந்த கட்சி பெரும்பான்மை பெறும் என்பதை கணிக்க முடியாத நிலை இருந்து வந்தது. முன்னிலை நிலவரம் தெரிய வந்த 222 தொகுதிகளில் 65 இடங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலையும், 115 இடங்களில் பாரதீய ஜனதா கட்சி முன்னிலை வகிக்கின்றன. ஜேடிஎஸ் 41 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.

இதையடுத்து பெங்களூரில் பாஜகவினர் வெற்றியை கொண்டாடத் தொடங்கியுள்ளனர்.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!